புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்த நிலையிலும், டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு இன்று 9-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் சுமார் 50 நாட்களாக போராடி வருகின்றனர். கடும் குளிர், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
8 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் தொரடப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும் வரை, இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இப்பிரச்சனையை முடிவு கொண்டு வர உறுப்பினர் குழு ஒன்றையும் அமைத்து உள்ளது. ஆனால் இந்த குழு முன் ஆஜராகமாட்டோம் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இன்று 9ம் கட்ட பேச்சுவார்த்தை
இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.
மேலும் படிக்க...
சோலார் மூலம் இயங்கும் பம்பு செட் அமைக்க 70% மானியம்! தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்!
வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!
வைப்பு நிதி முதலீட்டில் வட்டி குறைவு! நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தும் நேரமிது!
Share your comments