புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ஐடிஐ தொழிற்கல்வி படிப்பை முடித்து விட்டு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரபு நாடுகளில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய சிவக்குமார்,
வேறு வழியின்றி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நேரத்தில் சொந்த தொழில் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திராமல், சுய தொழில் செய்ய ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களையும், கடன் உதவிகளையும் அளிப்பது குறித்து கேள்விப்பட்ட சிவக்குமார், சிறிய அளவிலான தொழில் ஒன்றை தொடங்கலாம் என முடிவெடுத்து அரசு அலுவலகங்களுக்கு உதவி கேட்டுச் சென்றிருக்கிறார்.
இந்த நேரத்தில் கோவில்கள் தொடங்கி உணவகங்கள் வரை பல இடங்களிலும் பிரசாதங்கள், உணவுகள் வழங்க பாக்கு மட்டையிலான தட்டுகள் மற்றும் தொன்னைகளை வழங்குவதைக் கண்டுள்ளார். உடனடியாக இது தொடர்பாக இயந்திரங்கள் கிடைக்கும் இடங்கள் மற்றும் பாக்கு மட்டையில் தட்டு தயாரிக்க தேவையான உபகரணங்கள் குறித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள சில தொழிற்சாலைகளுக்கு நேரில் விசிட் அடித்துள்ளார்.
ரூ. 4.5 லட்சம் முதலீடு
போதுமான அனுபவங்களும், பயிற்சியும் அங்கு கிடைக்கவே உடனடியாக அரசின் மானியத்துடன் கூடிய கடனுதவியைப் பெற்று 5 வகையான அளவில் பாக்குமட்டைத் தட்டுகள் மற்றும் தொன்னைகள் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கியுள்ளார்.
அரசு வழங்கிய கடன் உதவியோடு குடும்பத்தினரின் நிதி உதவி மற்றும் தனது சேமிப்புகள் என சிறு கட்டிடம் உட்பட அனைத்துப் பணிகளுக்குமாக 4,50,000 ரூபாயை முதலீடாக வைத்து தொழிலை தொடங்கி உள்ளார்.
பாக்கு தட்டுகளுக்கு டிமாண்ட்
தொழில் தொடங்கிய போது, தொடக்கத்தில் தட்டுகளை விற்பதும் மார்க்கெட்டிங் செய்வதும் தான் மிகக் கடினமாக இருக்கப் போவதாக நினைத்ததாகவும், ஆனால் தான் நினைத்ததை விட இத்தயாரிப்புகளுக்கான தேவை மார்க்கெட்டில் அதிகமாக இருப்பதாவும் தெரிவிக்கிறார் சிவக்குமார்.
மேலும் படிக்க:
Share your comments