ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 8,498 குடியிருப்புகள் மற்றும் 32 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு தினமும் 19.50 லட்சம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் 70 சதவீதம் கழிவு நீராக விரயமாகிறது.
நிலத்தடி நீர் மட்டத்தை பொறுத்தவரையில் பல்வேறு பகுதிகளில் 400 அடிக்கும் கீழ் சென்று விட்டது. திரவக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த விரயமாகும் நீரை முறைப்படுத்த திட்டமிடப்பட்டு, எளிய தொழில்நுட்பம் மூலம் கழிவு நீரை சுத்தீகரிக்கும் திட்டம் செய்லபடுத்தப்பட்டுள்ளது.
முதற் கட்டமாக 420 வீடுகளின் கழிவு நீரை, இரண்டு வாய்க்கால் போல் அமைத்து அவ்வாய்காளில் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீரை வடிப்பதற்கு குறிப்பிட்ட 4 இடங்களில் ஆகாயத் தாமரை, கூழாங்கற்கள், 40 மி.மீ. மற்றும் 20 மி.மீ. ஜல்லி, மரக்கரி போன்ற படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு தொட்டிகள் சுத்தீகரிக்கப்பட்ட நீரை சேகரித்து, நீர் பம்ப் செய்யப்பட்டு மண்புழு உரம் மற்றும் இயற்கை உரப் படுக்கைக்கு தேவையான நீர் பெறப்படுகிறது. 300 க்கும் மேற்பட்ட கன்றுகளுக்கு நீராதாரமாக விளங்குகிறது. தினமும் 40,000 ஆயிரம் லிட்டர் நீர் சுத்தீகரிக்கப்படுகிறது.
கழிவு நீர் வாய்க்காலின் முதல் தடுப்பாக ஆகாயத் தாமரை குப்பைகளையும், சோப்பு போன்ற வேதியியல் கழிவுகளை தடுக்கிறது. கிருமி நாசினியாக செயல்பட்டு நுண்ணுயிர்களை கற்கள் மட்டும் கரித்துண்டு படுக்கைகள் தடுக்கின்றன.
இவ்வாறு கழிவு நீர் சுத்தீகரிக்கப்பட்டு உரக்கிடங்குகளுக்கும், கன்றுகளுக்கு அதிகளவில் பயன் படுகின்றன. மேலும் இச்செயலால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, ஆழ்குழாய் நீரின் தேவை கணிசமாக குறைந்துள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments