தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கவர்னரின் ஆங்கில உரையின் தமிழாக்கத்தை செய்து வருகிறார், மாநிலம் முழுவதும் உழவர் சந்தை தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டார். பெருந்தொற்றுக் காலத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் பேசப்பட்டது.
நேற்று தொடங்கிய தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் சம அரசியல் உரிமைகளை வழங்க இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும்.இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை சட்டங்களின் கீழ் குடியுரிமை வழங்க தேவையான சட்ட திருத்தங்களையும் செய்யுமாறு தமிழக அரசு ஒன்றிய அரசை வற்புறுத்தும்.
பல்வேறு அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொது சேவைகளை முறைப்படுத்த சேவைகள் உரிமை சட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.மேலும் விவசாயிகளின் வருவாயை மேம்படுத்துவதற்காக,கால்நடை பராமரிப்பு,இயற்கை வேளாண்மை,தோட்டக்கலை பயிர்கள் போன்ற வேளாண் தொடர்புடைய செயல்பாடுகளை ஊக்கமளிக்கப்படும்.
விவசாயிகளின் நலன் கருதி,விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் வேளாண்மைக்கு மட்டும் என தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யொப்டும். நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படும்.அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகளை முடித்திட அரசு தீவிரமாக உள்ளது.
முதல் நாள் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் உரையாற்றினார்,இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன. இன்று ஜூன் 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுவார்.
மேலும் படிக்க:
TN Govt: வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க தடை!
PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!
Share your comments