அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் அட்டை போன்ற பிரத்யேக உழவர் அடையாள அட்டைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது, மேலும் அவற்றை விரிவான விவசாய தரவுகளுடன் இணைத்து டிஜிட்டல் வேளாண்மை இயக்கத்தின் கீழ் துல்லியமான விவசாய டேட்டா சேகரிப்பை உறுதி செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஆதார் அட்டையைப் போன்றே நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் அவரவர்களுக்கென தனிப்பட்ட ‘விவசாயி ஐடி’ வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த 3 ஆண்டகளுக்குள் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில் 2024-25-ம் ஆண்டில் முதற்கட்டமாக சுமார் ஆறு கோடி பேருக்கு வழங்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றனர். இந்த 'விவாசாயி ஐடி கார்டு' மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களால் உருவாக்கப்பட்டு மத்திய அரசால் பராமரிக்கப்பட உள்ளது. இந்த ஐடிகள், நிலப் பதிவுகள், கால்நடைகளின் உரிமை, விதைக்கப்பட்ட பயிர்கள் மற்றும் கிடைக்கும் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தொடர்பான டேட்டாக்கள் ஒருங்கிணைக்கப்படும்.
அக்ரிஸ்டாக் (Agristock)
விவசாயிகளின் டிஜிட்டல் அடையாள அட்டை சேவை மூலம், நாட்டின் அக்ரிஸ்டாக்கின் முக்கியமான அம்சமாக இருக்கும். இது விவசாயிகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைபுக்காக (டிபிஐ) வடிவமைக்கப்பட்டுள்ளது, இது பயிர்க் கடன் மற்றும் பயிர்க் காப்பீடு உட்பட விவசாயிகளுக்கான சேவைகள் மற்றும் திட்ட விநியோகத்தை ஒழுங்குபடுத்துகிறது. விவசாயிகளின் அடையாள அட்டைகள் (விவசாயிகளின் பதிவேடு) தவிர, AgriStack அதன் பிரிவுகளாக புவி-குறிப்பிடப்பட்ட கிராம வரைபடங்கள் மற்றும் பயிர் விதைக்கப்பட்ட பதிவேடு (டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு) ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.
கிசான் கி பெஹ்சான் (Kisan Ki Pehchaan)
டிஜிட்டல் வேளாண்மை திட்டத்தின் கீழ், 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாளங்களை - கிசான் கி பெஹ்சான் (Kisan Ki Pehchaan) - உருவாக்க மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. அவர்களில் ஆறு கோடி பேர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த அட்டையை பெறுவார்கள். மூன்று கோடி பேர் 2025-26 ஆம் ஆண்டிலும், மீதமுள்ள இரண்டு கோடி பேர் 2026-27 ஆம் ஆண்டிலும் பெறுவார்கள்.
வெற்றிகரமாக முடிந்த பைலட் திட்டங்கள்
“PM-Kisan (வருமான ஆதரவுத் திட்டம்) கீழ் நிதி உதவி பெறும் 11 கோடி விவசாயிகளின் தொடர்புடைய அடிப்படைத் தகவல்கள் ஏற்கனவே அரசிடம் உள்ளன. இதுபோன்ற அடையாள அட்டைகளை உருவாக்குவதையும் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பையும் சோதிக்க ஆறு மாநிலங்களில் பைலட்(PIlot) திட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன,” என்று விவசாயத்துறை அதிகாரி கூறியுள்ளார். உத்தரபிரதேசம் (பருக்காபாத்), குஜராத் (காந்திநகர்), மகாராஷ்டிரா (பீட்), ஹரியானா (யமுனா நகர்), பஞ்சாப் (பதேகர் சாஹிப்), மற்றும் தமிழ்நாடு (விருதுநகர்) ஆகிய ஆறு மாநிலங்களில் இந்த பைலட் திட்டங்ககள் நடைபெற்றுள்ளது.
அக்ரிஸ்டாக்குடன் 19 மாநிலங்கள் ஒப்பந்தம்
இதற்கிடையில், 19 மாநிலங்கள் அக்ரிஸ்டாக்கை செயல்படுத்துவதற்காக வேளாண் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பின் கீழ், விவசாயிகள் விதைத்த பயிர்கள் ஒவ்வொரு விதைப்பு பருவத்திலும் மொபைல் அடிப்படையிலான நில ஆய்வு மூலம் பதிவு செய்யப்படும். இது நிலப்பரப்பின் தெளிவான படத்தையும் மேலும் உண்மையான மகசூல் மதிப்பீட்டையும் கொடுக்கும். டிஜிட்டல் பொது பயிர் மதிப்பீட்டு கணக்கெடுப்பு (DGCES) துல்லியமான மகசூல் மதிப்பீடுகளை வழங்கவும், விவசாய உற்பத்தி துல்லியத்தை அதிகரிக்கவும் அறிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட பயிர் வெட்டும் பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும்.
விரைவாகும் செயல்முறைகள்
இதன் மூலம், பேரிடர் கால இழப்பீடுகள் அளவிடவும், நிவாரணம் வழங்கவும், கடனுதவி மற்றும் காப்பீட்டு கோரிக்கைகளை விரைவாக வழங்க முடியும். டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு முதற்கட்டமாக, 2024-25-ம் ஆண்டில் 400 மாவட்டங்களில் முடிக்கப்படும், மீதமுள்ள மாவட்டங்கள் 2025-26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும். அக்ரிஸ்டாக் மற்றும் கிரிஷி-DSS ஆகிய இரண்டு அடிப்படை பிரிவுகளைக் கொண்ட டிஜிட்டல் வேளாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ.2,817 கோடிக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
கிருஷி-டிஎஸ்எஸ் ஆனது பயிர்கள், மண், வானிலை மற்றும் நீர் வளங்கள் பற்றிய தொலைநிலை உணர்திறன் தரவை ஒரு விரிவான புவிசார் அமைப்பில் ஒருங்கிணைத்து, விவசாயத் துறைக்கு சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான தகவல்களை வழங்கும். முழு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பும் நடைமுறைக்கு வந்ததும், பயிர் திட்டமிடல், சுகாதாரம், பூச்சி மேலாண்மை மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பொருத்தமான ஆலோசனையும் சேவைகளையும் வழங்க இது உதவும்.
அனைத்தும் டிஜிட்டல் மயம்
கூடுதலாக, மிஷன் 'மண் சுயவிவர வரைபடம்' இதில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இது, சுமார் 142 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு 1:10,000 அளவில் விரிவான மண் சுயவிவர வரைபடங்களை செயல்படுத்தும். 29 மில்லியன் ஹெக்டேர் மண் விவரப் பட்டியல் ஏற்கனவே வரைபடமாக்கப்பட்டுள்ளது. இங்கு கிருஷி பவனில் உள்ள விவசாய அமைச்சகத்தில் அவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் எளிதாக அணுகும் வகையில் வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு- திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு ஸ்பெஷல் ஆலோசனை!
Krishi-DSS | எப்போ விதைக்கனும் எப்போ அறுவடை செய்யனும்? இனி செயற்கைக்கோள் சொல்லும்!
Share your comments