உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் வைரஸ் தாக்கத்திற்கு பல்வேறு விதமான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
தடுப்பு மருந்து
சக்தி வாய்ந்த தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியும் நடைபெற்று வருகின்றன. கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் ஆபத்தான டெல்டா ரகம் முதல் பல ரகங்களுக்குத் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஓர் பாதுகாப்பான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
தங்களது இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர். புரோட்டோ ரிசர்ச் என்கிற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸின் 27 ரகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சாம்பிள்கள் இதற்காக ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது. புரதத்தை (Protein) கொண்டு வைரஸை அழிக்கும் புதிய மருந்து கலவையை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் பெயர் வைரல் புரோட்டின். இதன் முப்பரிணாமத்தையும் ஆராய்ந்துள்ளனர். இதற்காக பிரத்தியோகமாக கணினி அல்காரிதம் (Computer Algorithm) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஆர்என்ஏ பைண்டிங் செயல்பாடு நடைபெற்றது. இந்த ஆய்வு கலவைக்கு அனுமதி கிடைத்தால் இதன்மூலம் சர்வ வல்லமை பொருந்திய புதியதடுப்பு மருந்தை உருவாக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
குளிர்காலத்தில் கொரனாவின் புதிய ரகம்: பிரஞ்சு விஞ்ஞானி தகவல்
மாநிலங்களின் கையிருப்பில் 3.09 கோடி தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்!
Share your comments