தமிழ்நாட்டில் விரைவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், அரசின் பல்வேறு நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் என அறிவிக்கப்பட்டு உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பொங்கல் பரிசு (Pongal Gift)
ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக இருப்பவருக்கும் ஆதார் எண் அவசியம் இருந்தால் மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படுமா? என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. இதை உடனடியாக தீர்த்து வைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று ரேஷன் கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொதுமக்களின் அனைத்து விதமான அடையாள ஆவணங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தான் சமீபத்தில் மத்திய அரசு அனைவருடைய ஆதார் எண்களுடன் TANGEDCO ன் மின் நுகர்வோர் எண்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
அதிக அளவிலான மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு அரசு வழங்கும் இலவச 100 யூனிட் மின்சாரம் இனி கிடையாது. அவை ரத்து செய்யப்படும் என, சில தகவல்கள் பரவி வருவதால் ஏழை எளிய மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில் தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘ஒரு பயனாளி 5 மின் இணைப்பு வைத்திருந்தாலும் இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க
பணத்தை சேமிக்க நினைப்பவரா நீங்கள்? இந்த திட்டம் தான் பெஸ்ட் சாய்ஸ்!
PM கிசான் 13வது தவணை எப்போது? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
Share your comments