1. செய்திகள்

ஆதாருக்கு 10 ஆண்டுகள்தான்- அச்சச்சோ!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Aadhaar is only 10 years old - oops!

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும், இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆதார் அட்டை தொடர்பான திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

134 கோடி

நாட்டு மக்களுக்கு ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக திகழ்கிறது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகளுக்கும், பத்திரப்பதிவு செய்யவும் ஆதார் பயன்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

இறப்பு வரை

வாழ்நாள் முழுவதும், வாழ்க்கைக்கு பிறகும் என்பதுபோல, இருக்கும்போது, நமது முக்கியமான அடையாளமாகத் திகழும் ஆதார் அட்டை, நம் மரணத்திற்கு பிறகு, ஈமச்சடங்கு செய்வதற்கும் தேவைப்படுகிறது.அதாவது இறப்பு வரையிலான எல்லா நடைமுறைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருத்தம்

இந்தநிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆதார் அட்டைதாரர்கள், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இதற்காக தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும், முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து, 'அப்டேட்' செய்ய வேண்டும். அதன்மூலம், ஆதார் தரவுகளை சேமித்து வைக்கும் மத்திய அடையாள தரவுகள் சேமிப்பகத்தில், ஆதார் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய முடியும்.

அப்டேட் டாக்குமெண்ட்

இந்த பணியை ஆதார் அட்டைதாரர்கள் செய்வதற்காக, 'மைஆதார்' இணையதளத்திலும், 'மைஆதார்' செயலியிலும் 'அப்டேட் டாக்குமெண்ட்' என்ற பிரிவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேர்த்துள்ளது. இதுதவிர, பக்கத்தில் உள்ள ஆதார் மையங்களுக்கு நேரில் சென்றும், ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இத்தனை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலேர்ட்!

இந்த எருமையின் விலை ரூ.35 கோடி- பாதாம், பிஸ்தாதான் உணவு!

English Summary: Aadhaar is only 10 years old - oops! Published on: 11 November 2022, 09:17 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.