உணவு கொள்முதலில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பயிரிடுவோருக்கு பயோமெட்ரிக் அடையாளத்தை கட்டாயப்படுத்துவன் மூலமும், உண்மையான மற்றும் நியாயமான விவசாயிகளுக்கு மட்டுமே எம்.எஸ்.பி அல்லது குறைந்த பட்ச ஆதரவு விலைகளின், பயன் கிடைப்பதற்கு மத்திய அரசு புதிய சீர் திருத்தத்தை திட்டமிட்டுள்ளது.
நாங்கள் இந்த காரிஃப் அறுவடையில் ஓர் புதிய சோதனை திட்டமாக ஓடிசாவின் நான்கு மாவட்டங்களில் துவங்குகிறோம். மேலும் இத்திட்டத்தின் வெற்றிக்கு பிறகே நாட்டின் மற்ற மாநிலங்களில் செய்லபடுத்தப்படும், என அரசாங்கத்தின் மூத்த அதிகாரி கூறினார்.
தானியங்களை விவசாயிகளிடம் இருந்து எம்.எஸ்.பி யை விட குறைந்த விலையில் வர்த்தகர்களும், இடைத்தரகர்களும் வாங்கி, அதனை குறைந்த பட்ச விலைக்கு அரசாங்கத்திடம் விற்பதாக பல்வேறு புகார்கள் வருவதாக அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த நடைமுறையை குறைக்கும் வகையிலும் மற்றும் விவசாயிகள் தங்களுக்கு ஏற்ற விலையை பெறுவார்கள் என்றார். இந்த ஆதார் சரிபார்ப்பு திட்டமானது அரசாங்கத்திற்கு பொருட்களை விற்பனை செய்ய கட்டாயமாக அமையும், இதனால் நியாயமான விவசாயிகள் மட்டுமே பயனடைவார்கள்.
இந்தியா முழுவதிலும் உள்ள கொள்முதல் மையங்களை கணினிமயமாக்குவதற்கு தலா ரூ 1 லட்சம் வழங்குவதாகவும், அத்துடன் 1 மடி கணினி மற்றும் எலக்ட்ரானிக் பாயிண்ட்-சேல் (பிஓ எஸ்) இருக்கும். இது விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்ற பிறகு அவர்களின் கை நாட்டை பதிவு செய்ய உதவும். பிஓ எஸ் இயந்திரம் ஆதார் சரிபார்ப்பிற்கு மத்திய தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் இதன்மூலம் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விவசாயிகளுக்கான நியாய விலை நிர்ணயிக்கப்படும்.
குறிப்பாக இந்த மையம் பொது விநியோக முறையை ஆதரிப்பதற்கு கோதுமை மற்றும் அரிசியை பெருமளவில் வாங்குகிறது. இதனால் ஏழை குடும்பங்கள் தானியங்களை மானிய விலையில் பெறுகின்றனர்.
அவர் குறிப்பிடுகையில், ஒவ்வொரு வருடமும் எம்.எஸ்.பி.யில் 45 மில்லியன் டன் அரிசியும், 35 மில்லியன் டன் கோதுமையும் அரசாங்கம் வாங்குகிறது. இதனால் 10 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஃப்.எஸ்.ஏ) வின் படி கோதுமை மற்றும் அரிசி அதிக மானிய விகிதத்தில் ரேஷன் கடைகளுக்கு கிலோ ரூ 3, மற்றும் ரூ 2 என்ற விலையில் விநியோகிக்கப்படுகின்றது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments