1. செய்திகள்

விழிப்புணர்வு தகவல்: கேஸ் சிலிண்டர் வாங்கும் போது அனைவரும் கவனிக்க வேண்டியவை

KJ Staff
KJ Staff
Gas cylinder

நாம் எத்துணை நவீனமயமாக்களில் இருந்தாலும் சில நேரங்களில் நம் அறியாமையினால் பேராபத்தையும்,விபத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. அது போலத்தான் நாம் வீட்டிலும் சிலிண்டர் மற்றும் அதன் காலாவதி. நம்மில் எதனை பேர் இதை சரி பார்த்து சிலிண்டர் வாங்குகிறோம்? இன்றளவும் சிலிண்டர் வெடித்து உயிர் பலி என்ற செய்தியை பத்திரிக்கைகளிலும், ஊடகங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நாம் பயன்படுத்தும் எல்லா பொருளுக்கும் காலாவதி உண்டு. அதேபோலத்தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும்  சிலிண்டருக்கும் காலாவதி உண்டு. சிலருக்கு தெரிந்திருக்கும், பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  காலியாக உள்ள சிலிண்டரால் கூட ஆபத்துகள் நேரும் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரும்பு போன்ற ஒரு  உலோகதில் தொடர்ந்து கந்தக அமிலத்தை ஊற்றினால் இரும்பை அரித்துவிடும். இது  எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கும் பொருந்தும். பத்து ஆண்டுகள் வரை மட்டுமே சிலிண்டருக்கு ஆயுள். அதன்பின் அதனை மறுசுழற்சி செய்து  மீண்டும் புதிய சிலிண்டர்கள் உருவாக்கப்படும்.

Expiry date

எவ்வாறு தெரிந்து கொள்வது?

ஒவ்வொரு சிலிண்டரிலும் காலாவதி ஆண்டு மற்றும் மாதம் எழுதப்பட்டிருக்கும்.  சிலிண்டரின் சீல் சரிபார்த்து வாங்கும் நாம் காலாவதி விவரங்களையும் சரி பார்க்க வேண்டும்.

A  ஜனவரி முதல் மார்ச் வரை

B  ஏப்ரல் முதல் ஜூன் வரை

C  ஜூலை முதல் செப்டம்பர் வரை

D  அக்டோபர் முதல் டிசம்பர் வரை

உதாரணமாக, உங்கள் சிலிண்டரில் A 18 என்று எழுதப்பட்டிருந்தால், உங்கள் சிலிண்டர் காலாவதியாகும் நாள் மார்ச் 2018 என்று அர்த்தம். அதனால் அந்த தேதிக்கு மேல் அந்த சிலிண்டரை பயன்படுத்தக் கூடாது. தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு பகிருங்கள்.

Anitha Jegadeesan
Krishi Jaran

English Summary: Awareness Message: Do You Know How to Check LPG Cylinders Expiry Date? Published on: 21 August 2019, 05:47 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.