தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஷ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதில் மறுசுழற்சி செய்ய இயலாதவை, தரம் குறைந்த பிளாஷ்டிக் போன்றவை இதில் அடங்கும்.
தமிழக அரசு விநியோகம் செய்யும் ஆவின் பால் பாக்கெட்கள் மறுசுழற்சிக்கு உகந்தவையாகும். எனினும் பால் மற்றும் எண்ணை பொருட்களுக்கு இந்த தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை குறைக்க ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
பால் கவர், எண்ணெய் கவர் அதாவது மறுசுழற்சி செய்ய கூடிய பிளாஷ்டிக் பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருந்தது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கப்புகள் மற்றும் பீங்கான் கப்புகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தனது விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு மறுசுழற்சி செய்யும் வகையில் உள்ள பிளாஸ்டிக், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கப்புகள் போன்றவை பயன்படுத்தி வருகிறது. ஆவின் நிறுவனமானது சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 12 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்து வருகிறது.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டு கவர்களை குப்பையில் போட்டு விடுவார்கள். அந்த கவர்களை மறுசுழற்சி செய்யும் பொருட்டு திரும்ப பெற ஆவின் நிறுவனம் நடவடிக்கை முடிவெடுத்துள்ளது. இதற்காக 40 மையங்களை தேர்வு செய்யது, வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் காலி பாக்கெட்டுக்களை சில்லறை வணிகர்களிடமோ, விற்பனை நிலையங்களிலோ, முகவர்களிடமோ, பால் முகவர்களிடமோ, பால் கூட்டுறவு சங்கங்களிலோ கொடுத்து ஒரு பாக்கெட் ரூ. 10 பைசா விதம் பெற்று கொள்ளலாம். பால் சப்ளை செய்யும் ஊழியர்கள் பால் கவர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கி நிறுவனத்தில் கொடுக்கும் போது அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க ஏற்பாடு செய்த்துள்ளது.
தற்போது ஒரு கிலோ பால் கவர் ரூ. 10 ஆக உயர்ந்துள்ளது. இனியேனும் பால் கவர்களை தூக்கி எறியாது உரியவர்களிடம் கொடுத்து சரியான விலையை பெற்றுக் கொள்ளுங்கள்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments