1. கால்நடை

28ம்‌ தேதி வரை கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய்‌ தடுப்பூசி முகாம்‌

Deiva Bindhiya
Deiva Bindhiya
28ம்‌ தேதி வரை கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய்‌ தடுப்பூசி முகாம்‌
Abortion disease vaccination camp for cattle till 28th

கால்நடைகள்‌ குறிப்பாக பசுக்களுக்கு சினையுற்ற பின்‌ ஒருவித பாக்டீரியா நுண்கிருமியின்‌ மூலம்‌ கருச்சிதைவு நோய்‌ ஏற்பட்டு கரு கலைந்து விடுகிறது. மிகவும்‌ பிரயாசப்பட்டு சினையுற வைத்த விவசாயிகளுக்கு, இந்நோய்‌ மூலம்‌ பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, அரசு தரப்பில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நோயுற்ற கால்நடைகளின்‌ பிறப்பு உறுப்பிலிருந்து வெளிப்படும்‌ திரவங்கள்‌ மூலம்‌ இதர மாட்டினங்களுக்கு இது பரவ ஏதுவாகிறது. வருடத்திற்கு ஒரு கன்று என்ற குறிக்கோளுடன்‌ பால்பண்ணைகளை செயல்‌படுத்தி வரும்‌ பண்ணையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு நோய்‌ கண்ட கால்நடைகளை மீண்டும்‌ சினையுற வைப்பது கடினமாகும்‌. மாடுகள்‌ சினையுற்ற பின்‌ பாக்டீரியா கிருமி மூலம்‌ பரவும்‌ இந்நோய்‌ தாக்கியவுடன்‌ மாடுகள்‌ கன்றுகளை விசிறிவிடும்‌.

எனவே பால் பண்ணையாளர்களுக்கு ஏற்படும்‌ நஷ்டத்தை தவிர்க்கவும்‌, சிறந்த மற்றும்‌ சுகாதாரமான முறையில்‌ பால்‌ உற்பத்தியை பெருக்கவும்‌ 4 முதல்‌ 8 மாத வயதுள்ள இளம்‌ கிடேரி கன்றுகளுக்கு இத்தடுப்பூசியினை செலுத்தும்‌ பட்சத்தில்‌ ஆயுள்‌ நாள்‌ முழுவதும்‌ இந்நோய்க்கான எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுவிடும்‌. ஆகையினால்‌ தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்‌ துறை மூலம்‌ விருதுநகர்‌ மாவட்டத்தில்‌ கடந்த 1ம்‌ தேதி முதல்‌ வரும்‌ 28ம்‌ தேதி முடிய இளம்கன்றுகளுக்கு சிறப்பு முகாம்‌ நடத்தி இத்தடுப்பூசிப்பணி மேற்கொள்ள தீட்டமிடப்பட்டுள்ளது.

முகாம்கள்‌ நடைபெறும்‌ இடம்‌, ஊராட்சி குறித்து தொடர்பு கால்நடை உதவி மருத்துவர்கள்‌ மூலம்‌ அறிந்து கொள்ளலாம்‌. எனவே பால்‌ பண்ணையாளர்கள்‌ முகாமின்‌ போது வருகை புரியும்‌ மருத்துவக்‌ குழுவிற்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்து தங்கள்‌ கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக்‌ கொள்வதோடு தடுப்பூசி செலுத்தும்‌ முன்‌ கன்றின்‌ காதுகளில்‌ அணிவிக்கப்படும்‌ காது வில்லைகளை கழற்றாமல்‌ கன்றுகளை பராமரிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க: 33% பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு முதல்வர் அறிவிப்பு

மருத்துவக்‌ குழுவினர்‌ தடுப்பூசிப்பணி மேற்கொள்வதோடு, இந்திய அரசு நீர்ணயித்து உள்ள இணைய தளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யும்‌ பொருட்டு பண்ணையாளர்களின்‌ பெயர்‌ முகவரி, ஆதார்‌ எண்‌, கைப்பேசி எண்‌ ஆகிய விவரங்களை மருத்துவக்குழுவினரிடம்‌ தெரிவித்து அரசு வழங்கியுள்ள நெறிமுறைகளின்படி தற்காப்புடன்‌ தடுப்‌பூசிப்‌ பணியினை மேற்கொள்ள போதிய ஒத்துழைப்பு நல்கவும்‌ கால்நடை உரிமையாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜெ.மேகநாத ரெட்டி கேட்டுக்கொண்டார்‌. மேலும் சில குறிப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

கன்று ஈன்ற பசுக்களில் உறுப்பு வெளியாகும் வரை சில பண்ணையாளர்கள் பால் கறப்பதில்லை. இம்முறை சரியா?

  • இவ்வாறு செய்வது தவறாகும்.
  • கன்று ஈன்ற பசுக்களில் உறுப்பு வெளியாகும் முன்போ, பிறந்த கன்றுகளை பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கன்றுகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, சீம்பால் மூலமாக கிடைக்கிறது.
  • கன்றுகள் பசுக்களின் மடியில் பால் உண்ண துவங்க செய்வதன் மூலம் ஆக்சிடோசின் ஹார்மோன்கள் வெளியாகி அதன் மூலம் உறுப்பு வெளியாதலும் நடைபெற ஏதுவாகிறது.

கன்றுகளுக்கு சீம்பால் அளிப்பதன் முக்கியத்துவம் என்ன?

கன்று ஈன்றபின் சுரக்கும் முதல் பாலே சீம்பால் ஆகும். சீம்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமிருப்பதால் பிறந்த கன்றுகளை நோய்களின்று பாதுகாக்கின்றது. மேலும், சீம்பால் மலமிளக்கியாதலால், உணவு சீரணிக்க உதவுகின்றது. சீம்பாலை கன்று பிறந்த 1-1ஙூ மணி நேரத்திற்குள் அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள இம்முனோகிளாபுலின் குடலிலிருந்து உறிஞ்சப்படுவது நேரம் ஆக ஆக குறைகிறது.

மேலும் படிக்க:

சின்ன வெங்காயம்‌ விலை குறைய வாய்ப்பு! TNAU தகவல்

தற்காலிக மூங்கில் பந்தல் அமைக்க ரூ.25,000 மானியம்! Apply Today

English Summary: Abortion disease vaccination camp for cattle till 28th Published on: 06 February 2023, 02:05 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.