தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில் இருந்து 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பொறியியல் படிப்புகளுக்கான ஆர்வம் குறைந்து வருவதால் மாணவர் சேர்க்கை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிகளவிலான காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வருகிற கல்வி ஆண்டிற்கான அங்கீகாரம் பெற 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிகிறது. எனவே அவை வரும் கல்வியாண்டில் இருந்து மூடப்படும் என்று அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம்சார்பில் கூறும் போது, ‘‘போதிய அளவில் மாணவர்கள் இல்லாத காரணத்தால் வருகிற கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நாங்கள் இந்தமுறை நடத்தவில்லை என்று 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் கடிதம் அனுப்பி இருப்பதாக கூறி உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 494 தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பின் படி 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் கல்லூரிகள் சேர்ந்து படிக்க மாணவர்களுக்கு ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருவதாக பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவையாகவும், வேதனையாகவும் பல காட்சிகள் வெளிவருவதும், இது குறித்து மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதும் வாடிக்கையாகிவிட்டது துரதிருஷ்டவசமானது.
மேலும் படிக்க
ரூ.40 செலவில் 280 கி.மீ பயணிக்கலாம், கிராமத்தில் உருவாக்கப்பட்ட கார்
Share your comments