மத்திய அரசின் ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில் இதுவரை 5.20 கோடி பேர் சேர்க்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இனி வரும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அடல் பென்ஷன் யோஜனா (APY)
மத்திய அரசின் 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 5.20 கோடி பேர் சேர்ந்து உள்ளனர். கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்துக்கு மேல் அதிகமாகும். அடல் பென்ஷன் யோஜனா திட்ட மேலாண்மையில் இதுவரை மொத்த சொத்து மதிப்பு ரூ.27 ஆயிரத்து 200 கோடி ஆகும்.
பொதுத்துறை வங்கிகளில் 9 வங்கிகள் ஆண்டு இலக்கை எட்டியுள்ளன. பீகார், ஜார்கண்ட், அசாம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், திரிபுரா, ராஜஸ்தான், ஆந்திரா, சத்தீஷ்கார், ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 12 மாநிலங்கள் தங்களது மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு உதவியுடன் ஆண்டு இலக்கை அடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்தது. மேலும், இனி வரும் நாட்களில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக் தெரிகிறது.
மேலும் படிக்க
இனி இலவச மின்சாரத்திற்கும் மீட்டர் பொருத்தம் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு!
ஆன்லைன் ஆர்டரால் பணத்தை இழக்கும் மக்கள்: எச்சரிக்கும் காவல்துறையினர்!
Share your comments