Credit:Pinterest
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கத்தின் வழியாக நடத்தப்படும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை முதுநிலைப் பட்டயப்படிப்புகளான மாணவர்சேர்க்கை இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆண்டு மாணவர்சேர்க்கை இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.
Credit:Dinamalar
அதன்படி 2020-2021ம் ஆண்டுக்கான தொலைதூரக்கல்வி பட்டயப்படிப்புகளில், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு, வேளாண்மைத் தொழில் நுட்பங்கள், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், மூலிகை அறிவியியல், பண்ணைக்கருவிகள் இயந்திரங்கள் பராமரிப்பு போன்ற பட்டயப் படிப்புகளுக்கும், பட்டுப்புழு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மூலிகைப் பயிர்கள் சாகுபடி, அங்கக வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சான்றிதழ் பாடங்களுக்கான சோர்க்கை இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே 2020-2021ம் ஆண்டுக்கான தொலைதூரக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தொலைதூரக்கல்வி இயக்குநர் மு. ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
Credit:Newstm
மேற்கூறிய பட்டயப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.tnau.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக்கட்டணத்தையும் இணையதளம் மூலமாகவே செலுத்தலாம்.
மேலும் தகவல்களுக்கு,
இயக்குநர்
திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003 என்ற முகவரியிலும்,
0422 6611229 , 9442111048 , 9489051046 என்ற கைபேசி எண்களிலும்
[email protected] என்ற மின்னஞ்சல் மூலமும், தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!
பைசா செலவில்லாமல் இயற்கை உரங்கள்- சமயலறைக் கழிவுகளில் இருந்து! தயாரிப்பது எப்படி?
Share your comments