தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் புதன்கிழமை, அதாவது செப்டம்பர் 8ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்கல்வி (Agricultural education)
வேளாண் அறிவியல் சார்ந்தக் கல்வியை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கவும், வேளாண் பட்டதாரிகளை உருவாக்குவதிலும், கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பங்கு இன்றியமையாதது.
11 இளங்கலை பட்டப்படிப்புகள் (11 Bachelor's Degrees)
இந்தப் பல்கலைக்கழகத்தில் 11 இளங்கலை பட்டப்படிப்புகள் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலமாக வழங்கப்படுகின்றன.
நடப்புக் கல்வியாண்டிற்கான (2021-2022) இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளிடமிருந்து செப்டம்பர் 8ம் தேதி முதல் பெறப்பபட உள்ளது. மாணவர்கள் இணையதளம் மூலமாகத் தங்கள் விண்ணப்பங்களை அனுப்வி வைக்கவேண்டும்.
தமிழ்வழியில் ( Tamil Medium)
தமிழக அரசின் அறிவிப்பின்படி, இந்த கல்வியாண்டு முதல் புதிதாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகள் தமிழிலும் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்த தமிழ் வழி படிப்புகள் கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கப்படவுள்ளது.
புதியக் கல்லூரி (New College)
தமிழக அரசின் அறிவிப்பின்படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமானது, கல்வியாண்டிலேயே மேலும் புதிதாக ஒரு தோட்டக்கலைக் கல்லூரி, நடப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரிலும் மூன்று வேளாண்மை கல்லூரிகள் முறையே கரூர் மாவட்டத்திலும், கீழ்வேளூர், நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மற்றும் செட்டிநாடு, சிவகங்கை மாவட்டத்திலும் துவங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைபெறும்.
தகவல்
முனைவர்.மா. கல்யாணசுந்தரம், கோவை வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் மற்றும் தலைவர் (மாணவர்கள் சேர்க்கை)
மேலும் படிக்க...
இனி உங்களுக்கு ரேஷன் பொருள்கள் பெறுவதில் சிக்கல்- அரசின் விதிகளில் மாற்றம்!
Share your comments