1. செய்திகள்

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் இயற்கை வேளாண்மை, உணவுப் பதனிடுதல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை!

KJ Staff
KJ Staff

Credit: Pudiya Thalaimurai

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், வேலைவாய்ப்புடைய தொழிற்திறன் மேம்பாட்டிற்கு 2 புதிய பாடத்திட்டங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகத் துணைவேந்தர் பிச்சுமணி (Pichumani) தெரிவித்துள்ளார்.

உணவுப் பதனிடுதல் பட்டயப் படிப்பு:

3 ஆண்டு இளநிலைத் தொழிற்கல்வி எனப்படும் உணவுப் பதனிடுதல் (Food Processing), தரக் கட்டுப்பாடு (Analytical) மற்றும் பரிசோதனை தொழில்நுட்பத்தில் (Quality Control Techniques), மூன்று ஆண்டு இளநிலைத் தொழிற்கல்வி (B.Voc - Bachelor of Vocational Education). இந்தப் பாடத்திட்டத்தில் உணவுப் பதனிடுதல், உணவு தரக் கட்டுப்பாடு மற்றும் உணவுப் பரிசோதனையில் உள்ள கோட்பாடுகளை பல்கலைக்கழகத்தில் பாடமாகப் படிக்கும்போதே, உணவுப் பதனிடும் தொழிற்சாலையில் திறன் மேம்பாட்டிற்கு உள்ளிருப்புப் பயிற்சியும் (Internship) வழங்கப்படும்.

இயற்கை வேளாண்மை பட்டயப் படிப்பு:

மற்றொரு பாடத்திட்டம், அதாவது இயற்கை வேளாண்மை (Organic Farming) மற்றும் காளான் வளர்ப்பில் (Mushroom Cultivation) மேம்பட்ட பட்டயப் படிப்பு (Advanced Diploma in Agriculture). இந்தப் பாடத்திட்டத்தில் இயற்கை வேளாண்மையில் உள்ள அனைத்து அம்சங்களையும், குறிப்பாக இயற்கை வேளாண் பயிர் செய்யும் முறை, நுண்ணுயிர் இயற்கை உரம் (Microbial natural fertilizer) தயாரித்தல், பஞ்ச கவ்யா (Pancha Kavya) தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், பல்வேறு முறையில் காளான் வளர்த்தல், மதிப்புக்கூட்டு முறையில் காளான் உணவு தயாரித்தல், பண்ணை மேலாண்மைக் குழு அமைத்தல், விளைபொருள் சந்தைப்படுத்துதல், இயற்கை வேளாண் பொருட்கள் சான்று (Certificate of Natural Agricultural Products) பெறுதல், ஏற்றுமதிக் கொள்கைகள் போன்றவற்றின் கோட்பாடுகளைப் பல்கலைக்கழகத்தில் பாடமாகப் படிக்கும்போதே, தன்னார்வத் தொண்டு நிறுவனம், தனியார் மற்றும் அரசு வேளாண் பண்ணையில் நேரடி உள்ளிருப்புத் திறன் பயிற்சியும் (Training) குறுகிய காலப் பயிலரங்கம் மூலம் திறன் மேம்பாட்டுடன் கூடிய உடனடி வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

Credit: Hindu Tamil

வேலைவாய்ப்பு:

உணவு பதனிடும் தொழிற்சாலையிலும் இயற்கை வேளாண்மைத் துறை சார்ந்த பணிகளிலும் நிறையப் பணியிடங்கள் உருவாகி வரும் இந்தக் காலகட்டத்தில், இந்தப் பணியிடங்களுக்கு மாணவர்களைத் தயார் செய்ய NSQF (National Skill Qualififcation Framework) என்ற தேசியத் தொழிற்திறன் தகுதி (National Vocational Qualification) வரையறையின்படி மேற்கூறிய 2 பாடத் திட்டங்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (Manonmaniyam Sundaranagar University) பாடத்திட்டமாகத் தயாரித்துள்ளது.

மேலும், திறன் மேம்பாட்டிற்கும், உள்ளிருப்புப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்குப் பல தொழிற்சாலைகள், இயற்கை வேளாண் பண்ணை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது.

மாணவர் சேர்க்கை:

உணவுப் பதனிடுதல் மற்றும் இயற்கை வேளாண்மைப் பாடத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் அக்டோபர் 28 ஆம் தேதியாகும். இது தொடர்பான விவரங்களுக்கு பல்கலைக்கழக விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் UGC Nodal Officer சு. காளிதாஸை (Kalidoss) 0462-2563172, 94430 22508 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

 

மேலும் படிக்க...

பயிர்களைப் பாதுகாக்க விதை நேர்த்தி முறையை, கையாள்வது எப்படி?

சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கால்நடை சந்தையை, மீண்டும் துவக்க கோரிக்கை!

அனைவருக்கும் உணவு! தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் உறுதி!

English Summary: Admission to Manonmaniyam University for Natural Agriculture and Food Processing Courses!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.