கடந்த மார்ச் 4 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் கொவளை ஊராட்சியில் ராலிஸ் இந்தியா லிமிடெட் (டாடா நிறுவனம்) சார்பாக விவசாயத்தில் பயன்படுத்தபடும் பூச்சிக்கொல்லி மருந்துகளை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பது குறித்தும் அவற்றினை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
மாவட்ட விற்பனை அதிகாரி A.சேக் பரித் (ராலிஸ் இந்தியா) தலைமையில், கள பணியாளர்கள் நல்லதம்பி,சாரதி,ராஜவேல்,தீர்த்தராமன்,கெளதம் அவர்களின் முன்னிலையிலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
உரத்தினை பயன்படுத்தும் முறை:
கூட்டத்தில் விவசாயி மாரி, பாதுகாப்பான முறையில் மருந்துகளை தெளிப்பது எவ்வாறு? என கேள்வி எழுப்பினர். அதற்கு மாவட்ட விற்பனை அதிகாரி சேக் பரித் அளித்த பதிலின் விவரம் பின்வருமாறு- “ முதலில் பூச்சிகொல்லி மருந்து தெளிக்கும் முன்பு, மருந்து டப்பாவில் உள்ள அறிவுரைகளை நன்றாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு பூச்சிகொல்லி மருந்துகள் தெளிக்கும் போது,முக கவசம், கையுறை, கண்டிப்பாக அணிய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பலத்த காற்று வீசும் போது மருந்து தெளிப்பதை தவிர்க்குமாறும்,மருந்து தெளித்தப்பின் கைகளை நன்றாக கழுவாமல் உணவுகள் உண்ணக் கூடாது எனவும் அறிவுரை வழங்கினார். அதைப்போல், குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் மருந்துகளை பூட்டி வைக்குமாறும்” விவசாயி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
பூச்சிக்கொல்லி பாட்டில்களில் உள்ள விஷயங்கள்:
மேலும் பூச்சிக்கொல்லிகளின் விஷத்தன்மையை மருந்து டப்பாகளில் இருக்கும் வண்ணங்களின் அடிப்படையில் எவ்வாறு புரிந்துக் கொள்வது என விரிவாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு-
பச்சை கலர் குறிப்பிட்டு இருந்தால் - சிறிது நச்சுதன்மைஉடைய மருந்து எனவும்,(slightly toxic), நீல நிறம் குறிப்பிட்டு இருந்தால்- மிதமான நச்சுதன்மை உடைய மருந்து எனவும் Moderately toxic), மஞ்சள் நிறம் குறிப்பிட்டு இருந்தால்- அதிக நச்சுதன்மை உடைய மருந்து எனவும்,(Highly toxic), சிவப்பு நிறம் குறிப்பிட்டு இருந்தால்- மிக அதிக நச்சுதன்மை உடைய மருந்து எனவும்,(Extremely toxic) எனவும் விரிவாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தி முடித்த பிறகு அந்த மருந்து டப்பாகளை அதை அப்படியே விட்டுவிடாமல் - நன்றாக சுத்தம் செய்து பாதுகாப்பான இடத்தில் பூட்டி வைக்கும்படி பாதுகாப்பு ஆலோசனையும் வழங்கபட்டது.
மண் வள அட்டையின் மூலம் விவசாயிகள் தங்களது நிலத்தின் தன்மையினை நன்கு அறிந்துக் கொள்ள இயலும். மண்ணின் தன்மையினை அறிந்து அதில் எவ்விதமான சத்து குறைவாக உள்ளது என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கேற்ப உரத்தினை பயன்படுத்த வேண்டும் என வேளாண் துறை சார்பில் தொடர்ந்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Read more:
அரசின் மானியத்தோடு வீட்டுக் கொல்லைப்புறத்தில் அலங்கார வண்ண மீன் வளர்ப்பது எப்படி?
பாசிப்பயறு மற்றும் நிலக்கடலையில் புதிய இரகம் வெளியீடு- கைக்கொடுக்குமா விவசாயிகளுக்கு?
Share your comments