1. செய்திகள்

100 ஆண்டுகளை கடந்தும் வருத்தம் தான் மன்னிப்பு இல்லை - பிரிட்டன் அரசு

KJ Staff
KJ Staff

இந்தியா வரலாற்றில் "ஜாலியன் வாலாபாக் படுகொலை" என்பது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும்1919 ஆம் ஆண்டு  ஏப்ரல் 13,  சீக்கியர்கள் புத்தாண்டை  கொண்டாடி கொண்டு இருந்தனர். ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் ஒன்று கூடி அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் எனும் இடத்தில் புத்தாண்டை கொண்டாடுவதோடு,   ஆங்கிலேயரையும்  எதிர்த்து கோஷமிட்டு கொண்டிருந்தனர். ரவுலட் சட்டம் அமுல்படுத்தப்பட்ட சமயம் என்பதால் பெரும்பாலோனோர் அச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருத்தனர். அங்கு வந்த ஜெனரல் டயர்  துப்பாக்கிச் சூடு நடத்தும்படி தன் படையினருக்கு உத்தரவிட, அவர்களும் கண்முடித்தனமாக 1600 அப்பாவி மக்களை சுட்டு வீழ்த்தினர். ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்தியா சரித்திரத்தில் அது ஒரு கருப்பு நாளாகும். படுகொலை நடந்து  100  ஆண்டுகள் ஆகிவிட்டன

இந்த கொடுமையான சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு  மன்னிப்பு  கேட்க வேண்டும் என வலியுறுத்த உள்ளனர். இதேபோல, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டிஷில் வாழும்  பொது அமைப்புகள், சீக்கியர்களின் சர்வதேச சங்கங்களும் வலியுறுத்தி பிரிட்டன் அரசுக்கு  கடிதங்கள் எழுதி வருகின்றன.

இதற்கு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்  பிரிட்டன் ஆட்சி காலத்தில் நடந்த தலை குனியத்தக்க செயல் ஆகும். இதற்கு இந்த தருணத்தில் பிரிட்டன் அரசு சார்பாக எங்களது வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறோம். மேலும் அவர் கூறுகையில்  இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார். இருப்பினும் முழுமையான மன்னிப்பு கேட்கவில்லை என்பது ஏகோபித்த கருத்தாகும்

 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: After a Century Jallianwala Bagh Published on: 12 April 2019, 12:50 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.