மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக விவசாய சங்கங்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் தீவிர போராட்டங்களில் ஈடுபட விவசாயிகள் தயாராகி வரும் நிலையில் தமிழகத்திலும் விவசாய சங்கங்கள் போராட்ட முன்னெடுப்புகளை துவக்கியுள்ளன.
3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதால் அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக காவிரி வேளாண் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே பலன் தருவதாக உள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த 3 மசோதாக்களையும் திரும்பப் பெறா விட்டால் அக்.2ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணவிரோதப் போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் போது 3 மசோதாக்களையும் அரசு அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன? என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதோபோல் மேலும் சில விவசாய அமைப்பகளும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க..
அனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கும் தடை- மத்திய அரசு அதிரடி!
பண்டிகை காலத்தை முன்னிட்டு சாமந்தி நாற்றுகள் விற்பனைக்கு தயார்- விவசாயிகள் கவனத்திற்கு!
Share your comments