அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர இதுவரை, 2.72 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். முப்படைகளுக்கு, நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
அக்னிபாத் திட்டம் (Agnibath Scheme)
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், பொது மக்களிடம் ஆதரவு உள்ளது. இந்த நிலையில், ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் தனித்தனியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 'பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்' என, விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஏழு நாட்களில், அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியில் சேர இதுவரை 2.72 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
ஆதார் - பான் எண்ணை இன்றே இணைத்து விடுங்கள்: இரு மடங்காகும் அபராதம்!
Share your comments