வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாபெரும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், ஜூன் 11, 12, 13 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே நடைபெற்றது. உயர் விளைச்சல் தரக்கூடிய புதிய ரகங்கள், பாரம்பர்ய நெல் ரகங்கள், வருமானத்தைப் பெருக்க நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், களையெடுக்கும் கருவிகள், விளை பொருள்களை மதிப்புக்கூட்டும் கருவிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், பட்டு வளர்ப்புத் துறை உள்ளிட்ட பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றிருந்தன. மதுரை, சேலம், தேனி, விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, திருப்பூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், தஞ்சாவூர் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள்.
Share your comments