இயற்கை விவசாயம் குறித்தும், பாரம்பரிய நெல் இரகங்கள் குறித்தும் இன்றைய இளம் தலைமுறையினர் இடையே மிகச் சிறந்த அளவில் விழிப்புணர்வு (Awareness) ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்து அறிய நேரடி களப்பணியில் ஈடுபட்டு, இயற்கை உரத் தயாரிப்பு மற்றும் பாரம்பரிய நெல் இரகங்களைப் பற்றி மிகத் தெளிவாக அறிந்து கொள்கின்றனர். இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் வயலில் சாகுபடி செய்திருந்த பாரம்பரிய நெல்லை, வேளாண் கல்லுாரி மாணவியர் அறுவடை (Harvest) செய்து கொடுத்துள்ளனர். இதன் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு இயற்கை விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
அறுவடை செய்த மாணவியர்கள்:
தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 33; அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். நான்கு ஆண்டுகளாக இவர், தன், 1 ஏக்கர் நிலத்தில், பாரம்பரிய நெல் ரகமான மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி, கொத்தமல்லி சம்பா, சீரக சம்பா ஆகிய நெல் ரகங்களை சாகுபடி (Culyivation) செய்து வருகிறார். செங்கிப்பட்டி அருகே உள்ள தனியார் வேளாண் கல்லுாரி மாணவியர், இயற்கை விவசாயம் குறித்து, வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஆசிரியர் பாலமுருகனை சந்தித்தனர். பாலமுருகன், பாரம்பரிய நெல் சாகுபடி, இயற்கையான முறையில் உரம் தயாரிப்பு (Natural compost) குறித்து மாணவியருக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பாரம்பரிய நெல்லின் சிறப்பை கேட்ட மாணவியர், அறுவடையின் போது அழைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் நேற்று, பாலமுருகன் வயலில் அறுவடை நடந்தது. இதையடுத்து வயலுக்கு வந்த, 13 மாணவியர், நெல் அறுவடை செய்து, ஆசிரியருக்கு உதவினர்.
மகிழ்ச்சியில் மாணவியர்கள்
இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய நெல் ரகங்களை அறுவடை செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதில் மாணவியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு உதவியாக இருந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு நன்றியைத் தெரிவித்து உள்ளனர். மாணவியர்களின் இந்த செயல் மற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
டெல்லியில் 100 நாட்களை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்! முடிவுக்கு வருமா?
வெயில் சுட்டெரிப்பதால் நாகையில் களைகட்டுகிறது தர்பூசணி விற்பனை!
Share your comments