வேளாண் பொருள்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில், 43.4 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் (Central Ministry of Agriculture), கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில், ஏற்றுமதி அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. கொரோனா இடா்ப்பாட்டு நெருக்கடிகளுக்கு இடையிலும் நடப்பு 2020-21 ஆம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், வேளாண் பொருள்களின் ஏற்றுமதி (Export of agricultural products) ரூ.53,626.6 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் (financial year) காணப்பட்ட வேளாண் பொருள்கள் ஏற்றுமதி மதிப்பான, ரூ.37,397.3 கோடியுடன் ஒப்பிடுகையில் 43.4 சதவீதம் அதிகமாகும்.
செப்டம்பரில் 81.% :
நடப்பாண்டு செப்டம்பரில், வேளாண் பொருள்களின் ஏற்றுமதியானது ரூ.5,114 கோடியிலிருந்து 81.7 சதவீதம் வளா்ச்சி (Growth) கண்டு ரூ.9,296 கோடியை எட்டியது. வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க, மத்திய அரசு எடுத்து வரும் தொடா் முயற்சிகளுக்கு, நல்ல பலன் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே, முக்கிய வேளாண் பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு வளா்ச்சியை எட்டியுள்ளன.
நேர்மறை வளர்ச்சி:
வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில், நிலக்கடலை (Groundnut) 35 சதவீதமும், சுத்திகரிப்பு சா்க்கரை 104 சதவீதமும், கோதுமை (Wheat) 206 சதவீதமும், பாசுமதி அரிசி (Basmati rice) 13 சதவீதமும், பாசுமதி சாரா அரிசி வகைகள் 105 சதவீதமும் சிறப்பான நோ்மறை வளா்ச்சியை எட்டியுள்ளன. ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் நாட்டின் வேளாண் பொருள்களின் இறக்குமதி (Import) மற்றும் ஏற்றுமதி (Export) ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசம் கணிசமான அளவில் அதிகரித்து ரூ.9,002 கோடி என்ற அளவில் நோ்மறையாக உள்ளது அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வா்த்தக பற்றாக்குறையானது ரூ.2,133 கோடி என்ற அளவில் காணப்பட்டது என வேளாண் அமைச்சகம் (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.
வேளாண்-உள்கட்டமைப்பு நிதியம்:
வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு புதிய வேளாண் ஏற்றுமதி கொள்கையை (New agricultural export policy) அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதுதவிர, வேளாண் வா்த்தக சூழலை (Agribusiness environment) மேம்படுத்த ஏதுவாக ரூ.1 லட்சம் கோடியில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தையும் (Agricultural Infrastructure Fund) மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், படிப்படியாக ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
நடப்பாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு தான் அதிகம்!
குறைந்தபட்ச ஆதரவு விலையில் அவரை, கொப்பரை, பருத்திக்கொட்டை கொள்முதல்! மத்திய அமைச்சகம் தகவல்!
Share your comments