கூட்டுறவு மாநில வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியை மேம்படுத்துவது குறித்து பரிசீலித்து, அறிக்கை அளிக்க, தமிழக அரசு, 10 பேர் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
கூட்டுறவுத் துறையின் கீழ் கடன்:
தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ், கூட்டுறவு மாநில வேளாண் (Cooperative State Agriculture Bank) மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (Rural Development Bank) செயல்படுகிறது. இது, நிலத்தை மேம்படுத்துவது, டிராக்டர் வாங்குவது உள்ளிட்ட பணிகளுக்காக, 5 ஆண்டுகளுக்கு மேல் தவணை உடைய, நீண்ட கால கடன் வழங்குவதற்காக துவக்கப்பட்டது. அந்த வங்கிக்கு, 180 வட்டங்களில் அலுவலகங்கள் உள்ளன.
மாநில வேளாண் வங்கியில் விவசாயக் கடன்:
கூட்டுறவு அமைப்பாக செயல்படும், மாநில வேளாண் வங்கியில் (State Agricultural Bank) தற்போது, தங்க நகை அடமான கடன் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற கூட்டுறவு வங்கிகளான, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகளில் வழங்குவது போல், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து வகை கடன்களையும், மாநில வேளாண் வங்கியிலும் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, வங்கியின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அதை மேம்படுத்துவது தொடர்பாக பரிசீலித்து, அறிக்கை அளிக்க, தற்போது, 'நபார்டு' (NABARD) எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைமை பொது மேலாளர், நாகூர் அலி ஜின்னா (Nagore Ali Jinnah) தலைமையில், உயர்மட்ட குழுவை அமைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
உயர்மட்டக் குழு:
கூட்டுறவு, வேளாண், வங்கி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவிகுமார் (Ravikumar), கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், நிதித் துறை பிரதிநிதி, நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் உள்ளிட்ட, ஒன்பது பேர் உறுப்பினராக உள்ளனர். இந்த குழு கூடி, மூன்று மாதங்களுக்குள் தன் அறிக்கையை, அரசுக்கு அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30! காஞ்சிபுரம் வேளாண் மையம் அறிவிப்பு!
விவசாயதுறைக்கு பல கோடி நிதி உதவி! பயன்பெற்ற 2.5 கோடி விவசாயிகள்! பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்!
Share your comments