2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா பாதிப்பால் நாட்டின் உற்பத்தித் துறை, சேவைத் துறை ஆகியவை பெரிய அளவில் பாதிப்பு அடைந்த நிலையில் விவசாயத் துறையின் (Agriculture) சிறப்பான வளர்ச்சியை அடைந்து, நாட்டின் பொருளாதாரத்தை பெரிய அளவில் உயர்த்தியது. முதல் காலாண்டில் இந்தியாவில் வளர்ச்சி அடைந்த ஒரே துறை விவசாயம் மட்டும் தான்.
அரசு அறிவிப்புகள்:
அரசு அறிவிப்புகள், சிறப்பான பருவமழை, நடப்பு நிதியாண்டுக்குக் கூடுதலாக 65,000 கோடி ரூபாய் அளவிலான மானியம் (Subsidy), 3வது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் விவசாயத் துறையைச் சார்ந்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் (Indian Economic Development), விவசாய துறை பெரிய அளவிலான ஆதிக்கம் செய்கிறது. கொரோனா பாதிப்பும், கட்டுப்பாடுகளும் உச்சக்கட்டத்தில் இருந்த காலகட்டமான ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நாட்டின் விவசாயத் துறை உற்பத்தி 3.4 % வளர்ச்சியில் இருந்தது. எனவே செப்டம்பர் காலாண்டில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உற்பத்தி மற்றும் சேவைத் துறை வர்த்தகம் பெறத் துவங்கிய நிலையில் விவசாயத் துறை சிறப்பான வளர்ச்சி அடைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஊரக வளர்ச்சி
விவசாயத் துறைக்கு தற்போது, மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதன் ஆதிக்கத்தாலும் ஊரகப் பகுதிகளில் (Rural area) வர்த்தகம், மக்களின் வருமானம், மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வைத்துப் பல நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை, 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு விரிவாக்கம் (Expansion) செய்யத் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி துறை
ஜூன் காலாண்டில் ஊரடங்கு (Lockdown) காரணமாக நாட்டின் உற்பத்தித் துறை 35.7 சதவீதம் சரிந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 5.9 சதவீத அளவிலான சரிவை மட்டுமே சரிந்திருந்தது. இது இக்குறுகிய காலகட்டத்தில் ஏற்பட்ட சிறப்பான வளர்ச்சியாகும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தமிழகம் விருதுநகர் பகுதியில், கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்
Share your comments