Krishi Jagran Tamil
Menu Close Menu

கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்

Tuesday, 24 November 2020 09:45 PM , by: KJ Staff
Flower Farming

Credit : Dinakaran

விவசாயிகள், தற்காலத்தில் அதிகளவு பூக்களை (Flowers) விவசாயம் செய்து வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள கிராமங்களில் கோழிக்கொண்டை பூ விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் செலவும் அதிகம் தேவைப்படாத நிலையில் பராமரிப்பு செலவும் (Maintenance cost) இல்லை என்பதால் கோழிக்கொண்டை பூ விவசாயத்தை அதிகம் விரும்புகின்றனர்.

கோழிக்கொண்டை பூ விவசாயம்:

அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராமசாமி கூறுகையில், கடம்பன்குளம் கிராமத்தில் வசித்து வரும் நான் 2 ஏக்கர் நிலத்தில் கோழிக்கொண்டை பூ விவசாயம் செய்து வருகிறேன். நான் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் (Tamilnadu Transportation) பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கோழிக்கொண்டை பூ விவசாயம் செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் பூக்கள் நல்ல முறையில் பூத்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு 40 கிலோ பூ கிடைக்கிறது. விருதுநகர் மார்க்கெட்டில் கோழிக்கொண்டை பூ 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. நல்ல விளைச்சல் இருக்கும் பூவினால் லாபம் (Profit) ஈட்டி வருகிறோம், என்றார்.

பூக்கள் விலை உயர்வு:

நடப்பாண்டில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளியின் போது, பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக, பூக்கள் விவசாயத்தில், அதிக ஆர்வத்தோடு விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

Cockscomb flower farming கோழிக்கொண்டை பூ Virudhunagar விவசாயிகள் ஆர்வம் Flowers விருதுநகர்
English Summary: Farmers interested in Cockscomb flower farming

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!
  2. கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
  3. மரச்செக்கு எண்ணெய்த் தயாரிப்பில் அசத்தல் லாபம் பெரும் விவசாயி செல்வம்!
  4. சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
  5. புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருவாய் உயரும் - சர்வதேச நிதியம் கருத்து!
  6. Budget 2021 Mobile App : பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களும் உங்கள் கைகளில்!
  7. வாழை பயிரில் கூட்டு ஆராய்ச்சி : வேளாண் பல்கலை நைஜீரியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
  8. வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்! - உடனே விண்ணப்பிக்க... முழு விபரம் உள்ளே!!
  9. வெள்ளத்திலும் தாக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா! இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு!
  10. டிராக்டர் பேரணியில் வன்முறை! போராட்டத்தில் இரு விவசாய சங்கங்கள் வாபஸ்!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.