1. செய்திகள்

விவசாய சட்டத்தை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Agri Bills repeal Passed in Parliament

இந்தியாவில் இன்று 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது. இந்தியாவில் வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

எதிர்ப்பு 

வேளாண் சட்டங்களில் பாதகமான அம்சங்கள் இருப்பதாகக் கூறி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

தொடர்ந்து பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 19-ஆம் திகதி தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் (Vapous) பெறுவதாக அறிவித்தார். இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

போராட்டம் தொடரும் (Continuous Protest)

இருப்பினும், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்தனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.

மசோதா தாக்கல்

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று பாராளுமன்றத்தில் இன்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

முதலில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேறியது.

பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட ரத்து மசோதா, இனி ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

மேலும் படிக்க

வேளாண் சட்டம் வாபஸ் ஆகியும் போராட்டத்தை தொடரும் விவசாயிகள்!

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

English Summary: Agriculture law repeal bill passed in parliament! Published on: 29 November 2021, 06:55 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.