1. செய்திகள்

ராபி பயிர்களுக்கான, ஆதார விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்

KJ Staff
KJ Staff
Rabri crop

குளிர் காலம் தொடங்குவதை முன்னிட்டு ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 7% ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இது குறித்த தகவல்களை அரசு வெளியிட உள்ளது.

பொதுவாக ராபி காலத்தின் பிரதான பயிராக கூறப்படுவது கோதுமையாகும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 70% கோதுமை ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது. அக்டோபர் மாத இறுதியில்  ஹரியானா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு இம்முடிவினை வெளியிட உள்ளது.

கடந்த ஆண்டு ஒரு குவிண்டாலுக்கான ஆதார விலை ரூ 1840 ஆக இருந்து வந்தது. நடப்பாண்டில் 4.6% உயர்த்தி ஒரு குவிண்டாலுக்கான ஆதார விலை ரூ 1925 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. முன்னதாக  உணவு மானியத்திற்காக ரூ 1.84 லட்சம் கோடி நடப்பாண்டில் நிதி ஒதுக்கி இருந்தது. தற்போது ஆதார விலையை உயர்த்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ 3000 கோடி வரை செலவு அதிகரிக்கும் என கணக்கிட பட்டுள்ளது.

அதே போன்று வேளாண் அமைச்சகம் கடுகு, மசூர் பருப்புகள் மற்றும் பார்லிக்கான ஆதார விலையை உயர்த்துவதாகவும் அரசு திட்டமிட்டு வருகிறது. கடுகிற்கான ஆதார விலையை 5.6% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம் ஒரு குவிண்டால் விலை ரூ 4200 - ல்  இருந்து ரூ 4225 ஆக உயர்த்த உள்ளது. மசூர் பருப்பு மற்றும் பார்லிக்கான ஆதார விலையை 5.9% மற்றும் 7.26 % எனவும் திட்டமிட்டுள்ளது. 

Rabi Crop

ஒட்டு மொத்த உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு அரசானது வேளாண் கட்டணங்கள் மற்றும் இதர செலவுகளை (CACP) கணக்கிட்டு குறைந்தபட்ச ஆதார விலையை அரசானது நிர்ணயிக்கும். அதேபோன்று (CACP )பரிந்துரைக்கும் ஆதார விலையை அரசானது இதுவரை மறு பரிசீலனை எதுவுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது என்பதால் ஒட்டு மொத்த விவசாகிகளுக்கும் இது ஒரு நற்செய்தி செய்தி ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக உணவு தானியங்களின் உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு பெற்றதுடன் தானிய கிடங்குகளில் உபரியாக 70 மில்லியன் டன்  தானியங்கள் அரசின் கையிருப்பில் தற்போது இருந்து வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசானது பயறு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்கு ஊக்கமளித்து வருகிறது.

இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யின் அளவை குறைப்பதுடன் செலவையும் கட்டுப்படுத்த இயலும். இதனால் அரசனது எண்ணெய் வித்துக்களுக்கான கடுகு, சூரியகாந்தி போன்றவற்றை சாகுபடி செய்ய விவசாகிகளை ஊக்குவித்து அதன் ஆதார விலையை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Agriculture ministry has suggest to revise Minimum Support Price, up to 7% of these Rabi Published on: 07 October 2019, 01:59 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.