Krishi Jagran Tamil
Menu Close Menu

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு அறிவுப்பு

Friday, 04 October 2019 11:51 AM
Damaged Tree

தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது மரங்களை காப்பீடு செய்து பெரும் பொருளாதார பின்னடைவிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். இதற்காக அரியலூர் மாவட்ட ஆட்சியர் விவசாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் இயற்கை சீற்றங்களான புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், தீ விபத்து, நில ஆதிர்வு மற்றும் ஆழிப்பேரலை போன்றவற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாத்து கொள்ளலாம். அது மட்டுமல்லாது இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

காப்பீடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் இணைய விரும்புபவர்கள் ஒரு எக்டேருக்கு 175 தென்னை மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.

காப்பீடு செய்ய உள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை ஆகியன குறித்து சரியான முன்மொழிவு வரைவினை சமர்ப்பிக்க வேண்டும்.

காப்பீடு செய்யும் தென்னை  மரங்களில் வண்ணம் பூசி 1, 2, 3 என்று வரிசையாக இலக்கம் இட வேண்டும்.

காப்பீடு பிரீமியத்தில் மானிய தொகையில் 50% மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியமும், 25% மாநில அரசும் ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள 25 %  பிரீமிய தொகையை மட்டுமே  விவசாயிகள் செலுத்தினால் போதுமானது.

Affected Tree

நன்கு பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் வளமான தென்னை மரங்களை மட்டுமே அதன் வயதுக்கேற்ப பிரீமியம் செலுத்தி காப்பீடு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

வயது

இழப்பீடு தொகை

பிரீமிய தொகை

4 முதல் 15 வயது

ரூ.900

ரூ.2.25

15 முதல் 60 வயது

ரூ. 1,750

ரூ.3.50

விவசாயிகள், அருகில் இருக்கும்  வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி அங்கு வழங்கபடும்  முன்மொழிவு படிவத்தை பூர்த்தி செய்து பிரீமியத் தொகையை  அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்” என்ற பெயரில் சென்னையில் செலுத்த தக்க வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.

முன்மொழிவு படிவத்துடன்  சாகுபடி தொடர்பான  நில ஆவணங்காளான,  தென்னை சாகுபடி சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

காப்பீடு தொகையை பெற விரும்புபவர்கள்,  இழப்பு நிகழ்ந்து 15 நாட்களுக்குள்ளாக  அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்“ நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இது குறித்த விபரங்களுக்கு தங்களின்  வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

Coconut Tree Insurance Coconut Insurance scheme flood inundation pest nature causing irreparable damage

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. இயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்
  2. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசின் முக்கிய முடிவுகளும், அறிவுப்புகளும்
  3. உழவர் சந்தை நிர்வாகத்தின் பாராட்டதக்க புதிய முயற்சி, நாமும் பின்பற்றலாமே
  4. மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று நிவாரண டோக்கன் வழங்க அரசு முடிவு
  5. குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு
  6. காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை
  7. பொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்
  8. விற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்
  9. எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது
  10. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.