காளான் உற்பத்தி ஊக்குவிக்க 40% வரை மானியம் அறிவிப்பு!
தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பில் காளான் உற்பத்தியினை ஊக்குவிக்க காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க 40 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் மானியமாக வழங்கப்படும். மேலும், கிராமப்புற மகளிர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடம் அமைத்திட ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். அதே நேரம், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. இத்திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலை துறையின் அதிகார்பபூர்வ இணையதளத்தில் பதிவு செய்யவும்.
சிறார் குற்றங்களுக்கு தீர்வு காண ‘சிற்பி’ திட்டம்.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தத் திட்டம் மூலம், றார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் சிற்பி என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய காவல் துறை நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில், 8ம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு தனி சீருடை வழங்கப்பட உள்ளது. அதேபோல் பள்ளிகளில் தேசிய மாணவர் படை போன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது. இந்த சிற்பி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய நெற்பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பாண்டில் நல்ல மழை பெறப்பட்டுள்ளதால் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் தெரிவித்ததாவது, நடப்பு பருவமான சம்பா பருவத்திற்கேற்ற ஆகஸ்டு - நவம்பர் மாதங்களில் பயிரிட ஏற்புடைய அரிய வகை நெல் இரகங்கள், உடலுக்கு, நரம்புகளுக்கு சத்து தரக்கூடிய பாரம்பரிய நெல் விதைகள் தற்போது கிரிஷ்ணகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் கிடைக்கிறது. தமிழக அரசின் "நெல் ஜெயராமன்' பாரம்பரிய நெல் இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் இரகங்களான கருப்பு கவுணி, தூய மல்லி, சீரக சம்பா, அறுபதாம் குறுவை போன்ற நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு முழு விலை ரூ.25/- ஆகும், மானியம் 50 சதவீதத்தில் ரூ.12.50காசுகள்/- மட்டும் ஒரு கிலோவிற்கு என்ற வீதத்தில் பணம் செலுத்தி விதைகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
விவசாய தொழிலாளர்களுக்கு தொழில் பயிற்சி - தோட்டக்கலை துறை அழைப்பு!
தோட்டக்கலைத் துறை வாயிலாக இந்த ஆண்டு பூங்கொத்து அமைத்தல், பூ அலங்காரம் செய்தல் சொட்டுநீர் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செய்தல் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்கள் பயன்பெறலாம். தாராபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 30 நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ளும் நபர்களுக்கான போக்குவரத்து செலவும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலில் பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் 15ஆம் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
திருப்பதியில் இருந்து 27-ந்தேதி முதல் மின்சார பஸ்கள் இயக்கம்: ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைக்கிறார்
புதிய மின்சார பஸ்கள் 11-ந் தேதி நள்ளிரவு அலிபிரி பணிமனைக்கு வந்தடைகிறது. மொத்தம் 100 பஸ்கள் வரும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார பஸ்கள் திருமலை-திருப்பதி, திருப்பதியிலிருந்து விமான நிலையத்திற்கு இடையே 64 பஸ்கள், திருப்பதியில் இருந்து நெல்லூர், மதனப்பள்ளி, கடப்பா பகுதிக்கு 12 பஸ்கள் இயக்கப்படும். ஒவ்வொரு பஸ்சும் 50 சீட்டுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று மலைச் சாலையில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக மின்சார பஸ்கள் மட்டுமே இருக்கும். வருகிற 27-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்சு, மின்சார பஸ்களை தொடங்கி வைப்பார் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
ICL உரங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனை ஆய்வகம், பயிர் ஆலோசகர் கருவியை அறிமுகம் செய்ததது
ICL உரங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனை ஆய்வகம் மற்றும் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கான பயிர் ஆலோசகர் கருவியின் தொடக்க நிகழ்ச்சி 14 செப்டம்பர் 2022 அதாவது இன்று ஹோட்டல் சாயாஜி, மும்பை-பெங்களூரு பைபாஸ் நெடுஞ்சாலை, வகத் புனேவில் நடைபெற்றது. ICL பயிர் ஆலோசகர் - மண், நீர் மற்றும் இலை இலைக்காம்பு பகுப்பாய்வின் அடிப்படையில் பயிர்களின் இலக்கு விளைச்சலைப் பெற உதவுகிறது மற்றும் பயிர்களின் முக்கியமான வளர்ச்சி நிலை வாரியாக ஊட்டச்சத்து தேவையையும் பூர்த்தி செய்ய உதவுகிறது.
TNAU: சிறுதானியங்கள் வைத்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி!
விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியின் முன்னேற்றத்திற்கு உதவிய சிறந்த டிராக்டர்கள் விருது
விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியின் முன்னேற்றத்திற்கு உதவிய சிறந்த டிராக்டர்கள் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கான விருது வழங்கும் விழா புதுதில்லியில் உள்ள ICAR ஏபி சிந்து ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இவ் விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியை ஸ்வராஜ் டிராக்டர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. ஐந்து மணி நேரம் நீடித்த அக்ரிடெக் உச்சி மாநாட்டிற்குப் பிறகு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
வானிலை தகவல்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக செவ்வாய்கிழமை முதல் வருகிற 16ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த ஜூன் மாதம் 1ந்தேதி முதல் கடந்த திங்கள்கிழமை வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 252.3mm அளவுக்கு மழை இயல்பாக பதிவாக வேண்டும். ஆனால் இயல்பான அளவையும் தாண்டி 455.2mm அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது 80 சதவீதம் மழைப்பொழிவு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
தோட்டக்கலை சார்பாக 30 நாட்கள் பயிற்சி- போக்குவரத்து செலவும் அரசே ஏற்கும்
தோட்டக்கலை துறை காளான் உற்பத்திக்கு 40% வரை மானியம் அறிவிப்பு!
Share your comments