மண்ணிலா விவசாயம், குறைந்த உற்பத்தி இடத்தில் காய்கறிகளை திறம்பட பயிரிடலாம். இதனை ஆங்கிலத்தில் ஹைட்ரோபோனிக்ஸ் என்கின்றனர். இது 50 சதவீத மானியத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெருநகரங்களுக்கு பின்னேற்புமானியமாக ரூ.15,000/- வழங்கப்படுகிறது. எனவே, விவசாய பெருமக்கள் மண்ணிலா விவசாயம் செய்ய விரும்பினால், இம்மானியம் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இத்திட்டத்தில் பயன்பெற tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். அல்லது அருகில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி செய்தியை அறிந்திடலாம்.
சின்ன வெங்காயம் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மையத்தின் TN-IAM திட்டத்தின் நிதியுதவி விலைக் கணிப்புத் திட்டம், சின்ன வெங்காயத்திற்கான சந்தை ஆலோசனையை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் 90 சதவீத சின்ன வெங்காயம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறது. புரட்டாசியில் விதைப்பதற்கான தேவை செப்டம்பர் முதல் அக்டோபர் வரை அதிகரிக்கும் என்றும் பண்டிகைக் காலத்துடன் சிறிய வெங்காயத்தின் விலை மேலும், உயரக்கூடும் என்றும் வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, விவசாயிகள் அதற்கேற்ப உரிய சந்தைப்படுத்தல் முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேனியில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் முகாம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30 ம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது. இதில், தேனி மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் விவசாயம் குறித்தும் அதன் தொடர்புடைய துறைகள் குறித்தும் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம்.
மேலும், இதில், வோளண்மை, தோட்டக்கலைத்துறை, நீர்பாசனம், கூட்டுறவு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், கால்நடை, மின்சாரம் தொடர்புடைய கருத்துக்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.
கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 2022-இன் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்!
தமிழகம்: நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களை கோரும் விவசாயிகள்!
நெல் கொள்முதலில் ஈரப்பதம் அளவு விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், மயிலாடுதுறை விவசாயிகள் நடமாடும் நெல் உலர்த்தும் கருவிகளை மானிய விலையில் அல்லது வாடகை அடிப்படையில் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயத்திற்கு தேவைப்படும் உலர்த்தி கருவிகளை 50% மானியத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்றறு விவசாய மக்களின் பிரிதிநிதியாக அறுபதி பி கல்யாணம் மாநில அரசை வலியுறுத்தினார். அல்லது வேளாண் பொறியியல் துறை இயந்திரங்களை வாங்கி விவசாயிகளுக்கு வாடகைக்கு விட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடக்க ஜல்தூத் செயலி
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், "ஜல்தூத் செயலி"யை உருவாக்கியுள்ளது. இது கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் பயன்படுத்தப்படும்.. இதனை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், புதுதில்லியில் இன்று 27ந்தேதி நடைபெறும் விழாவில், "ஜல்தூத் செயலி"யை அறிமுகம் செய்து வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை ஆண்டுக்கு இருமுறை (பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய) காலங்களில் அளிவிடுவதற்கான வேலைவாய்ப்பு ஜல்தூத் செயலி உதவும் என்பது குறிப்பிடதக்கது.
தமிழகம்: நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களை கோரும் விவசாயிகள்!
கால்நடைகளுக்கான அடர்தீவனம் தயாரித்தல் மற்றும் அசோலா வளர்ப்பு இலவசப் பயிற்சி
கரூர் மாவட்டம், பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைகழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் "கால்நடைகளுக்கான அடர்தீவனம் தயாரித்தல் மற்றும் அசோலா வளர்ப்பு" ஒரு நாள் இலவசப்பயிற்சி 30.09.2022 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியிஸ் அடர்தீவனம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுத்தல், சமச்சீரான தீவனம் தயாரித்தல், அசோலாவில் உள்ள சத்துக்கள், அசோலாவை தீவனமாக கொடுக்ககூடிய அளவு, அசோலா உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் வளர்ப்பு செயல்முறை விளக்கம் ஆகியவை குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்களால் நடத்தப்பட உள்ளது. மேலும், விபரங்களுக்கு திரையில் தோன்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்.
முதலமைச்சர் ஸ்டாலின் Town Hall நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்புரை
#திராவிட மாடல் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது மற்றும் அதன் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. நான்காவது எஸ்டேட் தமிழகத்தின் அனைத்து உள்ளடக்கிய கொள்கைகளின் வெற்றிக் கதையை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் அவர் ஆற்றிய உரையில் முக்கிய பங்கு "Lessons from the South in the India Story" என்பதே ஆகும்.
மேலும் படிக்க:
Share your comments