அனைத்து மாவட்டங்களிலும், வாரம் ஒருமுறை உரங்கள் (Fertilizer) இருப்பு குறித்து ஆய்வு செய்ய, வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறுவை பருவ நெல் சாகுபடி
தமிழகத்தில் தற்போது, குறுவை பருவ நெல் சாகுபடி காலம் துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவ மழை (SouthWest Monsoon) துவங்கியுள்ளதால், இதை பயன்படுத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உள்ளிட்டவை சாகுபடியில் ஈடுபட, விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அக்டோபரில் வடகிழக்கு பருவமழை (NorthEast Monsoon) துவங்கும். அதை பயன்படுத்தி, மாநிலம் முழுதும் சம்பா பருவ நெல் சாகுபடி களைகட்டும்.
எனவே, ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை, உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தேவை அதிகரிக்கும்.தமிழகத்திற்கு தேவையான உரங்களை, மத்திய உர அமைச்சகம் ஒதுக்கீடு செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு மாதத்திற்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளன.
இருப்பு நிலவரம்
இந்நிலையில், மாவட்ட வாரியாக உள்ள உரங்கள் இருப்பு தேவை குறித்து, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்படி, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர், நேற்று ஆய்வு நடத்தினர். அனைத்து மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.
தமிழகத்திற்கு, டிசம்பர் மாதம் வரை தேவைப்படும் உரங்களை, மத்திய அரசிடம் இருந்து உடனுக்குடன் கேட்டு பெற முடிவெடுக்கப்பட்டது. சாகுபடியில் (Cultivation) ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை, தட்டுபாடின்றி வழங்க வேண்டும். உரங்கள் விலை நிலவரங்களை கண்காணிக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை உரங்கள் விற்பனை, இருப்பு நிலவரம் குறித்த அறிக்கையை தர வேண்டும் என, மாவட்ட வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க
நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!
கத்தரியில் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு முறைகள்!
Share your comments