பள்ளிக் கல்வித் துறையின் கீழ், ஆறு முதல் பிளஸ்2 வரையுள்ள மாணவர்களுக்கும், வேளாண் அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். 1978ம் ஆண்டு முதல், தொழிற்படிப்பு பிரிவின் கீழ், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேளாண் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2011ம் ஆண்டு ஒரு முறையும், 2019ல் ஒரு முறையும் இதன் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
வேளாண் செயல்முறைகள் என்பது தற்போது வேளாண் அறிவியல் என்று, பாடத்திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பின்பற்றப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் மாதவன் கூறுகையில், வேளாண் பல்கலையில் நடப்பாண்டு முதல், பிளஸ் 2 தொழிற்பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி.
வேளாண் படிப்பு (Agriculture studies)
வேளாண் படிப்பை, தொழிற்படிப்பு என்ற பிரிவின் கீழ் விலக்கி பொதுப்பாடப்பிரிவின் கீழ்கொண்டு வரவேண்டும். தவிர, ஆறு முதல் பிளஸ் 2 வரை, அனைத்து மாணவர்களுக்கும் வேளாண் பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம், என்றார்.
பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பாடத்தை அறிமுகப்படுத்தினால், இளம் வயதிலேயே விவசாயத்தைப் பற்றிய புரிதல் கிடைக்கும். மேலும், விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் நன்மதிப்பை அளிப்பார்கள்.
மேலும் படிக்க
Share your comments