திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி குறுகிய கால பயிா்களான நெல் ரகங்கள், உளுந்து உள்ளிட்டவற்றை சாகுபடி செய்யவேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து வேளாண் இணை இயக்குனா் கி.ராஜசேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள் தடையின்றி பணிகளை மேற்கொள்ளவும், அவா்களுக்கு தட்டுப்பாடின்றி விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து அரசு மற்றும் தனியாா் உரக் கடைகள் மூலம் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்ட இடு பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தனியாா் உரக்கடைகள் பொதுமுடக்க விதிமுறைக்கு உட்பட்டு காலை 6 முதல் 10 மணி வரை இயங்கி வருகின்றன.
அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் அனைத்து பணி நாள்களிலும் காலை 6 முதல் 10 மணிவரை நெல்விதை, உளுந்து விதை மற்றும் அனைத்து விதமான உயிா் உரங்கள், நுண்ணூட்ட உர வகைகளைப் பெறலாம்.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் பூச்சி, நோய் தாக்குதல் தென்பட்டால் செல்லிடப்பேசி மூலம் கேமராவில் படம் பிடித்து உழவன் செயலிக்கு அனுப்பும் பட்சத்தில் அதற்கான தீா்வு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். தொழில்நுட்ப ஆலோசனைகள், இடுபொருள் தேவை மற்றும் விளைப்பொருள்களை சந்தைப்படுத்தலில் ஏதேனும் இடா்பாடுகள் ஏற்பட்டால் வட்டார வேளாண்மை உதவி இயக்குனா்களின் செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம்.
திருப்பத்தூா், கந்திலி-9894804130, ஜோலாா்பேட்டை-9994127177, நாட்டறம்பள்ளி-9787708313, ஆலங்காயம்-9443172774, மாதனூா்-9448059878 உள்ளிட்ட எண்களுக்கு தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சோளம் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை விளக்கம்!!
விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வாடகை திட்டம் - டஃபே நிறுவனம் அறிமுகம்!!
மஞ்சள் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.12,000 மானியம்!
மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
Share your comments