முன்னாள் தமிழக முதல்வரும் தற்போதைய அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிசாமி எண்டோஸ்கோப் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாநில ஊரக உள்ளாட்சியில் காலியாக இருந்த இடங்களுக்கான இடைத் தேர்தலில் ஆளும் திமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி, நேற்று (அக்டோபர் 20) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் கூறினார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 21) சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அது தொடர்பான எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்காகத்தான் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதே எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு எண்டோஸ்கோப் சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. பழனிசாமி காலை 6:30 மணியளவில் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அறை எண் 11ல் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை தொடர்பாக எண்டோஸ்கோப் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி குணமடைந்து தொடர்ந்து தீவிர அரசியலில் இயங்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க:
Share your comments