ஒடிசாவில் ஃபனி புயல் நேற்று சூறையாடியது எனலாம். மேற்கு வங்கத்திலும் அதன் எதிரொலி இருந்தது எனலாம். எனினும் ஒடிசாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்திலும், இருளிலும் மூழ்கி உள்ளன.
கடந்த மாதம் 25 ஆம் தேதி வாங்க கடலில் உருவான குறைத்த காற்றழுத்தமானது மேற்கு நோக்கி நகர தொடங்கியது. குறைத்த காற்றழுத்தமானது வலுப்பெற்று தொடங்கியது. இந்த புயலானது மணிக்கு 175 கிமீ வேகத்தில் வீச தொடங்கியது. நேற்று காலை 8 மணியளவில் கடலில் மையம் கொண்ட புயலானது கரையை நோக்கி வர தொடங்கியது. 11 மணியளவில் முற்றிலுமாக கரையை வந்தடைத்தது.
ஒடிசா அரசு முன்னேற்பாடுகள் பல செய்திருந்த போதும் புயலானது பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றது எனலாம். இப்புயலினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 150 அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்கள், 50 - ற்கும் அதிகமான நகரங்கள் சேதமடைந்து உள்ளன. 8 மாவட்டங்கள் முழுமையாக இருளில் சூழ்ந்துள்ளன. பெரும்பாலான மரங்கள், மின்கம்பங்கள் சாய்த்துள்ளன. மக்கள் தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளார்.
முதல் கட்டமாக மத்திய அரசு சுமார் 300 கோடி ரூபாய் நிவாரண தொகையை வழங்கியுள்ளது. போர்க்கால அடிப்படையில் துரிதமாக மிட்பு நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது. மேலும் ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் ரெயில்வே நிர்வாகம் முற்றிலும் கட்டணமில்லாமல் இலவசமாக நிவாரண பொருட்களை ஒடிஷாவிற்கு கொண்டு செல்லும் என அறிவித்துள்ளது. ஃபனி புயலின் தீவிரம் மேற்கு வங்கத்திலும் எதிரொலித்தது, இரவு முழுவதும் கனமழை பெய்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான மக்கள் முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக வேறு இடங்களுக்கு மாற்ற பட்டதால் பெரும் உயிர் சேதம் நிகழவில்லை.
Share your comments