உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை ஏழு மணி முதல் தொடங்கி ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. வாடிவாசல் திறந்ததும் சீறி பாய்ந்து காளைகள். அதை தாவி பிடிக்கும் இளைஞர்கள் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களம், போர்களம் பூண்டது.
அலங்காநல்லூரில் வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளைகளை ஏறு தழுவ மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் களத்தில் இறங்கினர். போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். பாரம்பரிய விளையாட்டு அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கிறது, அதே நேரம் களமும் அனல் பறக்க இருந்தது என்று சொன்னால், அது மிகையாகது.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் (Alanganallur Jallikattu) நடைபெற்றது. அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்த நிலையில், இன்று அலங்காநல்லூரில் ஏறு தழுவும் போட்டித் துவங்கியது. இந்த போட்டி, நேற்றே நடத்தப்பட இருந்த நிலையில், வார இறுதி ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு கோலகலமாக நடைபெற்றது.
இதில் காளைகள் அனைத்தும் சீறி பாய்ந்த வண்ணம் வந்து, வீரர்களை தீக்கு முக்காட செய்தன. இதைத் தொடர்ந்து, வெள்ளையன் என்ற காளை வெளிவர தயங்கி நின்றதும், வீரர்கள் அதை எளிதாக நினைக்க, தீமிரிக் கொண்டு வெளிவந்த காளை, அனைவரையும் ரவுண்டு கட்டி வீளாசியது குறிப்பிடதக்கது.
இன்று நடந்த அலங்க நல்லூர் ஜல்லிகட்டில் 19 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது. அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 சுற்றுகளாக இந்த போட்டி நடைபெற்றது, 700 காளைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தாலும் 1020 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 21 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக் முதலமைச்சர் வழங்கிய முதல் பரிசு காரை தட்டிச் சென்றார். மேலும் 18 காளைகளை அடக்கி, இரண்டாம் இடத்தை பிடித்தார், அலங்காநல்லூரைச் சேர்ந்த ராம்குமார்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக, மிகுந்த எச்சரிக்கையுடன் நடத்தப்படும், இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கையாகவும், மருத்துவ உதவிக்காகவும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை சான்றிதழ் வைத்துள்ள காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க:
மஞ்சள் மற்றும் தயிரின் பேஸ் பேக் டிப்ஸ்! அதன் நன்மைகள் என்ன?
ஜல்லிக்கட்டில் முறைகேடாக களமிறங்கிய வீரர்கள், உரிமையாளர் மீது சீரிய காளை!
Share your comments