தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்யப் பள்ளிக் கல்வித்துறைத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தேர்ச்சி (Pass)
கொரோனா பாதிப்பு காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் மூடப்பட்டிருந்தன. அதேநேரத்தில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அது மட்டுமல்லாமல் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
தொற்று குறைந்தது (Infection is minimal)
எனினும் அரசு எடுத்தத் தொடர் நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வருடம் மாணவர்களுக்குக் கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆயிரத்தைத் தாண்டியது (Exceeded a thousand)
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1,500யை எட்டியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் மறுபுறம், அதிவேகமாக பரவி வருவதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஜனவரி 10-ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆல் பாஸ் (All Pass)
இந்நிலையில் தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய பள்ளிக் கல்வித்துறைத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆல் பாஸ் (All Pass) செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இருப்பினும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளைத் திட்டமிட்டபடி நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments