கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அளித்த விடுமுறையை ஈடுகட்ட ஏதுவாக, இனிவரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் (Corona spread)
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.
வகுப்புகள் தொடக்கம் (Classes start)
இருப்பினும், வைரஸ் தொற்று ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 1ம் தேதி , 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளும் செயல்படத் தொடங்கின.
விடுமுறை (Holidays)
ஆனால், தீபாவளிவிடுமுறை மற்றும் ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புதிய உத்தரவு
இந்நிலையில், அதிகளவு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டதால், இந்த விடுமுறை நாட்களை ஈடுகட்ட வசதியாக,இனிவரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் சோகம்
இனிவரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்றப் ன பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு மாணவ- மாணவிகளை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் படிக்க...
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!
Share your comments