1. செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்க அனுமதி! சுகாதார அமைப்பு!

T. Vigneshwaran
T. Vigneshwaran
உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைமை விஞ்ஞானி சவுமியா ஸ்வாமிநாதன்

தமிழகத்தில் செப்டெம்பர் 1ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்புக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு தொடர வேண்டும் என்ற எந்த விதமான தகவலும் என்னும் வெளியிடப்பட வில்லை. தமிழக அரசு இது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைமை விஞ்ஞானி சவுமியா ஸ்வாமிநாதன் ஐசிஎம்ஆரின் செரோ சர்வே அறிக்கையை மேற்கோள் காட்டி பேசிய அவர், தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் நேரடி வகுப்புகளை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சவுமியா சுவாமிநாதன் தெரிவித்த கருத்தின்படி குழந்தைகள் ஷாப்பிங், விளையாடுதல் மற்றும் மற்றவர்களுடன் கலந்துரையாடுவது போன்ற சமூக வெளிப்பாடு குழந்தைகளிடையே ஆன்டிபாடிகள் இருப்பதற்கான முக்கிய காரணம் என்றும். நல்ல காற்றோட்டம், சரீர இடைவெளி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டால் பள்ளிகளில் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று கூறுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை, இருந்தாலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் குழந்தைகளில் நோய்த்தொற்றின் விகிதம் மாறலாம் ஆனால் பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளில் நோயின் தீவிரம் மிகக் குறைவாக இருக்கும் என்று சவுமியா ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகள், பள்ளி மாணவர்களுக்கு எந்த  வித திறனையும் அறிவையும் மற்றும் கல்வியையும் மேம்படுத்த வில்லை. இதனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மாநில அரசு தொடக்கப்பள்ளிகளை அதாவது 1-8 ஆம் வகுப்பு வரை தொடங்க ஆலோசனை செய்யலாம் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைமை விஞ்ஞானி சவுமியா ஸ்வாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

ரேஷன் கார்டு இனி கட்டாயம் இல்லை! மக்கள் மகிழ்ச்சி!

ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்! எடப்பாடி கண்டனம்!

English Summary: All schools allowed to open in Tamil Nadu! Health system! Published on: 27 September 2021, 05:21 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.