1. செய்திகள்

எதிர்வரும் குளிர்கால கூட்டுத்தொடரில், விதைகள் மசோதா புதிய அறிவுப்பு

KJ Staff
KJ Staff
Variety of Seeds

விதைகளை பாதுகாக்கும் அமைப்பான (Alliance for Sustainable and Holistic Agriculture (ASHA)) வேளாண் மேம்பாட்டுக்கான கூட்டமைப்பு, விவாசகிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், பதிவு செய்யப்பட்ட விதைகளை பாதுகாக்கவும் சில திருத்தங்களை வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. வரும் குளிர்கால கூட்டுத் தொடரில் இது குறித்த விவாதங்கள் நடத்தப்பட உள்ளன.

நீடித்த மற்றும் முழுமையான வேளாண் மேம்பாட்டுக்கான கூட்டமைப்பு  (ASHA), இதனை விதை பாதுகாப்பு அமைப்பு என்றும் கூறலாம், இவ்வமைப்பானது விதைகளை உருவாக்குதல், பாதுகாத்தல், சேமித்தல், பயன்படுத்துதல், பரிமாறி கொள்ளுதல், கொள்முதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற அனைத்து உரிமையையும் விவாசகிகளுக்கே வழங்க வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

எதிர் வரும் குளிர்கால கூட்டத்தொடரில்  வேளாண் துறை சார்பாக, புதிய விதைகள் மசோதா மற்றும் பூச்சி மருந்துகள் மசோதா பற்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மசோதாவை அரசும், விவசாயிகளும் எதிர்நோக்கி காத்துள்ளனர் எனலாம்.

Alliance for Sustainable and Holistic Agriculture (ASHA)

பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள்

  • விவசாயிகளின் பாரம்பரிய உரிமையை அரசு உறுதி செய்து பாதுகாக்க வேண்டும்.
  • கார்ப்பரேட் பிடியில் உள்ள விதை விலை நிர்ணயம் போன்றவற்றில் அரசு தலையிட்டு அதனை விவசாகிகள்  பயன்பெறும் வகையில் ஒழுங்குமுறை செய்ய வேண்டும்.
  • விவாசகிகளுக்கு தேவைப்படும் விதைகள் நேர்தியானதாகவும், போதுமான மற்றும் அனைத்து வகை விதைகள் கையிருப்பு உள்ளதாகவும், விதைகளின் விலை வாங்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.
  • விதை என்பது விவசாகிகளின் மூலதனம் மற்றும் வேளாண்மைக்கு அடிப்படை ஆதாரம் என்பதை கருத்தில் கொண்டு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
  • விதைகளின் விலை மற்றும் ஆதாய விலை (Royalty) கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை அந்தந்த மாநிலங்களுக்கே வழங்கும் வகை செய்ய  வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். அதே போன்று சில்லரை விற்பனையில் 5% அதிகமாக ஆதாய விலைகட்டணம் இருக்கக் கூடாது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
  • விதைகளை  உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க வழி செய்ய  வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • புதிய விதைகள் மசோதா அமலுக்கு வருமேயானால், 1983ம் ஆண்டின் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை ரத்தாகிவிடும் என கூறப்படுகிறது. எனவே அந்த ஆணையின் கீழ் செயல்படும் மாநில அரசுகளுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர்.
Farmers Protection
  • தற்போது நடைமுறையில் உள்ள  விதை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் பயன்படுத்தப்படும் பதிவினை எளிமை படுத்த வேண்டும் என்றும், மேலும் பதிவு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளனர்.
  • விதை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பதிவு விவரங்களை பொதுவில் வெளியிடுவதை கட்டாயமாக்க வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட விதைகளின் விவரங்களை தேசிய மரபணு வங்கியில் பாதுகாப்பதற்காக,  "தேசிய மரபணு ஆதார அமைப்புக்கு" அனுப்பி வைக்க வேண்டும் என்றும்அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலே குறிப்பிட்டுள்ள பரிந்துரைக்களை வரும் மசோதாவில் நிறைவேற்றினால் விவசாகிகளின் உரிமைகள் பாதுகாப்பதுடன், விதைகளும் பாதுகாக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Alliance for Sustainable and Holistic Agriculture recommends to protect the farmer’s right Published on: 09 October 2019, 01:02 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.