1. செய்திகள்

மாத இறுதியில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை வரவேற்க தயாராவோம்

KJ Staff
KJ Staff
Northeast Monsoon

தமிழகத்திற்கு ஆதாயம் தரும் மழைகளில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகும். இன்றுடன் தென்மேற்கு பருவ மழை படிப்படியாக குறைந்து, இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக தென்மேற்கு பருவமழையானது  ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும்,  வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் பொழியும். ஆனால் இம்முறை மழை பொழிவானது நான்கு மாதங்களாக நீடித்து சற்று தாமதமாக விடை பெற்ற உள்ளது. இந்த மழை பொழிவினால் இந்திய முழுவதும் ஓரளவிற்கு நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

Meteorological department

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தென் மாநிலங்களில் இருந்து விலகி மற்ற பகுதிகளில் குறிப்பாக மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவிலும் நிலவி வந்த நிலையில் தற்போது அங்கிருந்தும் விலகத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒட்டுமொத்தமாக விடை பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவ மழையில் தான் அதிக பலன் கிடைக்கும்.  ஆனால் இம்முறை பெய்த தென்மேற்கு பருவ மழையினால் இயல்பை விட 110% அதிகம் பெய்துள்ளது. காற்றின் திசை பொறுத்து வடகிழக்கு பருவ மழை அதிகரிக்க கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Weather Updates: Southwest Monsoon Finally Begins to Withdraw, Reported by IMD

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.