சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய வகையில் புதிய முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்துவருகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது.
தனியார் மயம்
கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிராஸ் காஸ்ட் காண்ட்ரக்ட் முறையில் இந்த பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து நாளை அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மாநகர போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனைகள் முன்பு நாளை போராட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு . அறிவித்துள்ளது.
சென்னையில் அரசு பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது. சென்னையில் 625 வழித்தடங்களில் 3436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி 29.50 லட்சம் மக்கள் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், ஒரு நாள் மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.
கட்டணம்
மாநகர் போக்குவரத்துக் கழகம் தற்போது பேருந்துகளை இயக்கி வரும் வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்த பேருந்துகளுக்கு கி.மீ இவ்வளவு ரூபாய் என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சி சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு முன்னதாக, மும்பை போன்ற மாநிலங்களில் இது போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மா ஏற்றுமதி மண்டலம் அமைக்க கிருஷ்ணகிரி விவசாயிகள் கோரிக்கை!
பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்: விரைந்து விண்ணப்பிக்கவும்!
Share your comments