தமிழகத்தில் அரசு பணியிலுள்ள ஊழியர்கள் தங்களது பணிக் காலத்தில் தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள். அவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ள பட்சத்தில் அரசு உடனே ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும். அவ்வாறு ஊழியர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாதபட்சத்திலும் (அல்லது) அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் வேறு ஏதேனும் சிக்கல்கள் இருக்கும் பட்சத்திலும் அவை நிராகரிக்கப்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (Government School Teachers)
அரசு ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிராகரிக்கும்போதும் (அல்லது) தாமதிக்கும்போதும் ஊழியர்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அத்துடன் பல வருடங்களாக அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள் பணிக் காலத்தில் கூடுதல் கல்வித் தகுதியை பெற்றால், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் சார்பாக அரசிடம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 10/03/2020-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று கூடுதல் கல்விபெற அரசால் அனுப்பப்பட்டு இருந்தாலும் (அல்லது) கல்விவிடுப்பை பயன்படுத்தி கூடுதல் கல்வி பெற்றிருந்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை.
அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஓய்வு பெறும் நாள்வரை 2 முறை மட்டுமே கூடுதல் கல்விக்கான ஊக்கத்தொகையை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை! உடனே விண்ணபியுங்கள்!
Share your comments