இந்திய பாதுகாப்பு படையில் பணிபுரிய அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் வாயிலாக தற்போது இளைஞர்கள் விமானப்படையில் சேர்ந்து பணிபுரிய ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது ,இது குறித்த முழுமையான விவரங்களை பின்வருமாறு காண்போம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக வருகிற 17ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு இணையவழித்தேர்வு அக்டோபர் 13ம்தேதி முதல் நடைபெற உள்ளது.
தகுதி
27.6.2003 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் 27.12.2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்.
12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென் டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும்.
தேர்வு மூன்று முறைகளை கொண்டது. எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது.
பணி விவரம்
இதில் பணியமர்த்தப்பட்டால் இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.
இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதை பணியமர்த்தப்பட்ட வீரர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.
இதில் விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களை அறிந்துகொள்ள https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
மேலும் படிக்க
சூரிய சக்தியில் மினி டிராக்டர்- கவனத்தை ஈர்த்த தினை விவசாயி
காட்டு யானை குறித்த அறிக்கை- முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி
Share your comments