ஆந்திரா முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்ற பின் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது செயல் பாடுகள் பலராலும் பாராட்ட பட்டு வருகிறது. 5 துணை முதல்வர்களை அறிவித்த பின், தற்போது விவசாகிகளுக்காக உதவித்தொகையை அறிவித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதியின் போது வேளாண் மற்றும் வேளாண் சார்த்த தொழில்களுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்க படும் என்றிருந்தார். அதன்படி தற்போது விவாசகிகளுக்கு வருடத்திற்கு ரூ12,500/- வழங்க உத்தரவு வழங்கி உள்ளது. இத்திட்டமானது வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அமுல் படுத்த உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 62% மக்கள் வேளாண் மற்றும் வேளாண் சார்த்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நிரந்தர வருவாயினை பெறும் வகையில் திட்டமானது அறிவிக்க பட்டுள்ளது.
விவசாகிகளுக்கான திட்டங்கள்
- இலவச பயிர் காப்பீடு திட்டம்
- விவாசகிகளுக்கு வட்டி இல்ல கடன்
- போலியான விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியன தடை செய்யப்படும். தயாரிக்கும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க படும். தேவைப்படும் பட்சத்தில் மாநில அரசு புதிய சட்டம் கொண்டு வரும்.
- விவசாகிகளின் விளை பொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயம் என பல திட்டங்களை அறிவித்துள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments