1. செய்திகள்

பயிர் நிவராண நிதி முதல் TNPSC வேலைவாய்ப்பு வரையிலான அறிவிப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Announcement from Crop Relief Fund to TNPSC Employment!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில், ஆவின் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையின் மூலம், அரசுக்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைப்பு குறித்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார்.

இச்சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது என்பது குறிப்பிடதக்கது.

தமிழ்தாட்டில் உள்ள எல்லா அரசு பணியிடங்களும் தமிழர்களுக்கு மட்டுமே. மாநகரம், பல்கலை கழகம் ஆகியவற்றிலும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து, 2021- 22ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். அதன்படி அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செலவினங்களுக்காக 3 ஆயிரத்து 19 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர், கடந்த அக்டோபர் மாதம் முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை கனமழையால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

மேலும், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்குவதற்காக 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு முன்பணமாக 182 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையும், அவர் தெரிவித்தார்.

இதேபோன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்காக முன்பணமாக 97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் அறிக்கையில் அறிவித்தார்.

இறுதியாக, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

PF Account வைத்திருப்போருக்கு நற்ச்செய்தி: கணக்கில் வந்தது மிகப்பெரிய தொகை

இந்த தொழில் தொடங்க, அரசு 85% மானியம் வழங்குகிறது

English Summary: Announcement from Crop Relief Fund to TNPSC Employment! Published on: 07 January 2022, 05:59 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.