1. செய்திகள்

ரேஷன் அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் - அமைச்சர் செல்லூர் ராஜூ!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

ரேஷன் அட்டை இருந்தால் போதும் கூட்டுறவு வங்கிகளில் யார் வேண்டுமானாலும் ரூ.50,000 கடன் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மக்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு திட்டங்களை மாநில அரசு அறிவித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேபோல் அனைத்து ரேஷன் அட்டை தார்களுக்கும் ரூ.1000 வழங்கி இருந்தது. மேலும் பல்வேறு நலவாரிய தொழிலாளர்களுக்கு ரூபாய் 2000 வரை நிதி உதவி வழங்கியது.

இந்த நிலையில் ரேஷன் அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன் பெறலாம் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார். மதுரை மாடக்குளம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மூளிகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அ.தி.மு.க. அரசும், அ.தி.மு.க.வினரும் நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இழந்த பொருளாதார வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் கூட்டுறவு வங்கி சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், வியாபாரிகள் நகைக் கடனாக கிராமுக்கு ரூ.3 ஆயிரம் வரை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு 69 பைசா மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். சிறுகுறு வியாபாரிகள் பயனடையும் வகையில், ஒவ்வொருவருக்கும் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இதனை ரேஷன் அட்டை ஆவணம் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகையை 350 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.குறைந்த காலத்தில் தொகையை திரும்பி செலுத்தினால் மீண்டும் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் 4,645 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வங்கிகள் செயல்படுகிறது. அவற்றில் 75 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன் பெறலாம். அதற்கான வழிமுறைகளை எளிமையாக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

English Summary: Anyone can get a loan of up to Rs.50,000 in co-operative bank only with the proof of Ration card - Minister Sellur K. Raju

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.