ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (வெள்ளி கிழமை) நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி L. நாகேஸ்வர ராவ், இவ்வாறு கூறினார், ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளின் ஆண்டறிக்கையினை வெளியிட வேண்டும். வெளிப்படைத்தன்மை அவசியமானதாகும். வங்கி விதிமுறை மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சுபாஷ் சந்திரா அகர்வால் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளின் ஆண்டறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த வழக்கானது கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இப்பொழுதும் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இம்முறையும் பதில் அளிக்கவில்லை எனில் நீதி மன்ற அவமதிப்பு வழக்காக கருதி ரிசர்வ் வங்கிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி இதற்கு பதிலளிக்கும் வகையில், வங்கிகளின் ஆண்டறிக்கையினை வெளியிடுவது அல்லது தகவல்களை பகிர்ந்து கொள்வது என்பது வங்கிகளின் நம்பகத்தன்மைக்கு எதிரானதாக கருதப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளது.
Share your comments